• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கஜா புயலால் உடைமைகள் இழப்பு: மகனை ₹10,000-க்கு விற்ற தம்பதி

கஜா புயலால் உடைமைகள் இழப்பு: மகனை ₹10,000-க்கு விற்ற தம்பதி

பெற்றோர்களால் விற்கப்பட்ட மகன்.

பெற்றோர்களால் விற்கப்பட்ட மகன்.

பட்டுக்கோட்டையில் வசிக்கும் ஒரு தம்பதி கஜா புயல் தங்கள் வீடு மற்றும் உடைமைகள் அனைத்தையும் இழந்து தவித்தனர்.  ஆனால், நிலைமையை சமாளிக்க வழி ஏதும் இல்லாமல் தங்களது இளைய மகனை இந்த தம்பதி நாகை பனங்குடியில் உள்ள சந்துரு என்பவரின் நிலத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்ற அனுப்பியதாகத் தெரிகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் உடைமைகள் அனைத்தையும் இழந்த ஒரு தம்பதி தங்கள் 12 வயது மகனை 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கஜா புயல் கடந்த நவம்பர் 15ஆம் தேதி தமிழகத்தின் திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களைக் கடுமையாக பதம் பார்த்தது. இதில் ஏராளமானோர் தங்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்தனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் வசிக்கும் ஒரு தம்பதி கஜா புயல் தங்கள் வீடு மற்றும் உடைமைகள் அனைத்தையும் இழந்து தவித்தனர்.  ஆனால், நிலைமையை சமாளிக்க வழி ஏதும் இல்லாமல் தங்களது இளைய மகனை இந்த தம்பதி நாகை பனங்குடியில் உள்ள சந்துரு என்பவரின் நிலத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்ற அனுப்பியதாகத் தெரிகிறது.

15 நாட்களுக்கு அந்தச் சிறுவன் மாடு மேய்த்ததாகவும் கூறப்படுகிறது. தகவல் அறிந்ததும் கடந்த 22-ம் தேதி குழந்தை பாதுகாப்பு மைய அதிகாரிகள் சிறுவனை மீட்டு தஞ்சையில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்த்தனர். சந்துரு மீது நாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: