• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • போலீஸ் விரட்டி சென்றபோது பிரபல ரவுடி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு!

போலீஸ் விரட்டி சென்றபோது பிரபல ரவுடி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு!

பிரபல ரவுடி பாட்டில் மணியின் உடலை கிணற்றில் இருந்து மீட்கும் போது

பிரபல ரவுடி பாட்டில் மணியின் உடலை கிணற்றில் இருந்து மீட்கும் போது

திருவண்ணாமலை, மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்களில் கொலை மற்றும் கஞ்சா கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையவர் சிவகாசியை சேர்ந்த பிரபல ரவுடி பாட்டில் மணி.

  • News18
  • Last Updated :
  • Share this:
    காஞ்சிபுரம் அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை காவல்துறையினர் விரட்டி சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

    திருவண்ணாமலை, மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்களில் கொலை மற்றும் கஞ்சா கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையவர் சிவகாசியை சேர்ந்த பிரபல ரவுடி பாட்டில் மணி.

    இவர் தனது கூட்டாளியுடன் செய்யாறு அருகே பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, பாட்டில் மணியை காவல்துறையினர் பிடிக்க முயன்றனர்.

    அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய பாட்டில் மணியை காவல்துறையினர் விரட்டினர். அப்போது வடமாவந்தல் பகுதியில் உள்ள கிணற்றில் ரவுடி தவறி விழுந்து உயிரிழந்தார்.

    காவல்துறையினர் கிணற்றில் விழுந்து உயிரிழந்த பாட்டில்மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துனர்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: