Home /News /tamil-nadu /

சளி, காய்ச்சல் மட்டுமே இருந்தது... முதல் இரண்டு அலைகளில் பாதிக்கப்படவில்லை - ஒமைக்ரான் தொற்றிலிருந்து மீண்டவர் பேட்டி!

சளி, காய்ச்சல் மட்டுமே இருந்தது... முதல் இரண்டு அலைகளில் பாதிக்கப்படவில்லை - ஒமைக்ரான் தொற்றிலிருந்து மீண்டவர் பேட்டி!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தற்போது ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டிருக்கும் ஐந்து பேருக்கும் இது தான் முதல் முறை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
சளி, காய்ச்சல் மட்டுமே மூன்று நாட்களுக்கு இருந்ததாகவும் தீவிர அறிகுறிகள் ஏதும் இல்லை என்றும் ஒமைக்ரான் தொற்றிலிருந்து மீண்ட சென்னையை சேர்ந்த நபர் நியூஸ்18க்கு பேட்டியளித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது 45 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 16 பேர் மட்டும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மற்றவர்கள் வீடு திரும்பிவிட்டனர்.
தமிழ்நாட்டில் இரண்டாவது நபராக ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டவர்கள் தொற்றிலிருந்து மீண்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

விமானம் மூலம் வெளிநாட்டிலிருந்து திரும்பிய அவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு மேலும் நான்கு குடும்ப உறுப்பினர்களுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது.
நியூஸ்18க்கு பேட்டியளித்த அவர், "முதல் இரண்டு நாட்கள் தொண்டை எரிச்சல் இருந்தது, அடுத்த நாள் சளி ஏற்பட்டது. அதன் பின் காய்ச்சல் 101, 102 டிகிரி இருந்தது. காய்ச்சலுக்கான அடிப்படை மருந்துகள் தரப்பட்டன. ஒரு நாளில் காய்ச்சல் சரியாகிவிட்டது. ஆக்சிஜன் அளவு 98 இருந்தது. சில நேரங்களில் 99 கூட இருந்தது." என்றார்.

Also read... டெல்லியில் அமலானது மஞ்சள் எச்சரிக்கை - பள்ளி, ஜிம், திரையரங்குகள் மூடப்பட்டன!

மேலும் ," தற்போது ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டிருக்கும் ஐந்து பேருக்கும் இது தான் முதல் முறை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முதல் இரண்டு அலைகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதில் நான்கு பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியிருந்தனர். என் மனைவி மட்டும் தடுப்பூசி செலுத்தவில்லை. அவருக்கும் சளி காய்ச்சல் ஆகிய அறிகுறிகளே இருந்தன " என்றார்.

Also read... பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள இணை நோய்க்கான சான்றிதழ் தேவையில்லை - மத்திய அரசு!

" ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டால் யாரும் பயப்பட வேண்டாம். சாதாரண அறிகுறிகள் தான் ஏற்பட்டன. அரசு மருத்துவமனையில் நல்ல சிகிச்சை வழங்கப்படுகிறது. மிகவும் சுத்தமாகவும் பராமரிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனை குறித்து எங்களுக்கு இருந்த பிம்பத்தை மாற்றியுள்ளது" என்று மேலும் அவர் தெரிவித்தார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Omicron

அடுத்த செய்தி