பேய் விரட்டுவது போல் கனவு கண்டதாக கிணற்றில் குதித்த நபர்... புதையல் காரணமா என்று போலீசார் விசாரணை...!

பேய் விரட்டுவது போல் கனவு கண்டதாக கிணற்றில் குதித்த நபர்... புதையல் காரணமா என்று போலீசார் விசாரணை...!
ஸ்டீபன்
  • News18
  • Last Updated: November 22, 2019, 4:08 PM IST
  • Share this:
கன்னியாகுமரி மாவட்டம் ஐரேணிபுரம் அருகே கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட ஒருவர், பேய் விரட்டியதாக கனவு கண்டு கிணற்றில் குதித்ததாக தெரிவித்துள்ளார்.

அயனிவிளையைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவர் அதிகாலையில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். திடீரென விழித்து ஓட்டம் பிடித்தவர், பேய் விரட்டுவதாக கனவு கண்டு, அருகிலுள்ள நாகதேவி கோவில் கிணற்றில் குதித்ததாக கூறப்படுகிறது.

ஒரு அடி தண்ணீரில் நின்று கொண்டிருந்த ஸ்டீபனை கண்டு அப்பகுதியினர் அளித்த தகவலின்பேரில், தீயணைப்பு துறையினர் வந்து அவரை மீட்டனர்.


ஸ்டீபன் கூறுவதில் சந்தேகமடைந்த போலீசார், புதையல் எதுவும் இருப்பதாக எண்ணி கிணற்றில் இறங்கினாரா அல்லது வேறு காரணமா என பல கோணங்களில் விசாரித்துவருகின்றனர்.

Also see...
First published: November 22, 2019, 4:08 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading