Home /News /tamil-nadu /

விழுப்புரத்தில் தாய், மகள் அடித்துக்கொலை - 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீஸ்

விழுப்புரத்தில் தாய், மகள் அடித்துக்கொலை - 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீஸ்

கோப்புப் படம்

கோப்புப் படம்

கந்தப்பன்சாவடி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி சரோஜா, அவரது மகள் பூங்காவனம் ஆகியோர் நேற்று முன்தினம் வீட்டில் ரத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டனர்.

  • News18
  • Last Updated :
    விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே தாய், மகள் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் திருவெண்ணைநல்லூர் அருகே கைது செய்யப்பட்டார்.

    விழுப்புரம் மாவட்டம் கந்தப்பன்சாவடி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி சரோஜா, அவரது மகள் பூங்காவனம் ஆகியோர் நேற்று முன்தினம் வீட்டில் ரத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்கள் அணிந்திருந்த நகைகளும் திருடுபோனது. இதேபோல், அதே பகுதியைச் சேர்ந்த அஞ்சம்மாள், அவரது கணவர் நாகலிங்கம் ஆகியோரைத் தாக்கிய கொள்ளையர்கள், அவர்களிடம் இருந்த நகை, பணத்தை பறித்து சென்றனர்.

    இதையடுத்து, கொள்ளையர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் திருவெண்ணை நல்லூர் பகுதியில் தலைமறைவாக இருந்த கவிதாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    Also read... மதுரையில் பிரபல நிதி நிறுவன ஊழியர்களை தாக்கி நகை பணம் கொள்ளை

    விசாரணையில் அந்த நபர், இருவரை கொலை செய்து நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டனார். கவிதாஸ் மீது விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக டிஐஜி பாண்டியன் தெரிவித்தார்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள்

    அடுத்த செய்தி