16 ஏக்கர் நிலத்தை அபகரித்த பா.ஜ.க பிரமுகர்... பாதிக்கப்பட்டவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி!

தற்கொலைக்கு முயற்சித்த வெங்கட்நாராயணா

நிலத்தை விற்பனை செய்து தருவதாக கூறியவர்கள் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வது வெங்கட்நாராயணா தம்பதியினருக்கு தெரியவந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தனது 16 ஏக்கர் நிலத்தை அபகரித்த பாஜக பிரமுகர் மீது புகார் அளிக்க வந்த நபர், சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆவடியை சேர்ந்தவர் வெங்கட் நாராயணன், அவருக்கு சொந்தமான திருவள்ளூர் மாவட்டம் வயலாநல்லூர் கிராமத்தில் உள்ள 16 ஏக்கர் நிலத்தை விற்பதற்கான உரிமத்தை பாஜக பிரமுகர் ரமணன் மற்றும் அவரின் நண்பர் சதீஷ்குமாருக்கு வழங்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிலத்தை விற்பனை செய்து தருவதாக கூறியவர்கள் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வது வெங்கட்நாராயணா தம்பதியினருக்கு தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த 6ஆம் தேதி அன்று குடும்பத்துடன் வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நில அபகரிப்பு பிரிவில் புகார் அளித்துள்ளனர். மேலும் பூந்தமல்லி பத்திரப்பதிவு அலுவலகத்தில் விற்பனை உரிமத்தை ரத்து செய்ய தடங்கள் மனுவையும் நேற்று அளித்துள்ளனர்.

Also read... படகில் மறைத்து வைத்து கள்ளச்சாராயம் கடத்தல் - 400 லிட்டர் பறிமுதல்!

இதனை அறிந்த ரமணன் மற்றும் அவரது நண்பர்கள் வெங்கட் நாராயணன் வீடு புகுந்து அவரது மனைவி மற்றும் குழந்தையை கத்திமுனையில் மிரட்டி வெங்கட்நாராயணா வலுக்கட்டாயமாக பூந்தமல்லி பத்திரப்பதிவு அலுவலகம் அழைத்து வந்து மாலை 6 மணிக்கு மேல்,16 ஏக்கர் நிலத்தை வேறொரு பெயருக்கு மாற்றி பத்திரப்பதிவு செய்து உள்ளனர்.

இதனால் மனமுடைந்த வெங்கட்நாராயணா காவல் துறை ஆணையாளர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். அவரை மீட்ட காவல்துறையினர் உடனடியாக வேப்பேரி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அனுப்பினர் மேலும் புகார் அளிக்க வந்த வெங்கட்நாராயணா மனைவி விஜயாவிடம் புகார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: