Home /News /tamil-nadu /

வாயோடு வாய் வைத்து மூச்சுகொடுத்து குரங்கின் உயிரைக் காப்பாற்றிய மனிதர் - நெகிழவைக்கும் வீடியோ

வாயோடு வாய் வைத்து மூச்சுகொடுத்து குரங்கின் உயிரைக் காப்பாற்றிய மனிதர் - நெகிழவைக்கும் வீடியோ

குரங்கு

குரங்கு

பெரம்பலூரில் மயக்க நிலையில் இருந்த குரங்குக்கு மூச்சு கொடுத்து ஒருவர் காப்பாற்றியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

    இன்றைய பரபரப்பான நவீன உலகில் சாலையில் மனிதர்கள் யாரேனும் உதவி கோரி நிற்கும்போதும் கூட சக மனிதர்கள் அதைக் கண்டுகொள்ளாமல் செல்லும் சூழலே இருந்துவருகிறது. இந்தச் சூழலுக்கு யாரையும் குற்றம் சொல்லும் நிலை இல்லை. ஒவ்வொருவரும் ஏதேனும் அவசரமான சூழலில் தங்கள் வாழ்க்கையை பிணைத்துள்ளதே அதற்கு காரணம்.

    இந்த பரபரப்பான வாழ்க்கை முறையிலும் சக மனிதர்கள், விலங்குகளுக்கு செவி கொடுத்து உதவும் பலரை நாம் அவ்வப்போது அடையாளம் காணும் வாய்ப்பு கிடைக்கிறது. தற்போது அப்படி ஒரு மனிதம் நிரம்பி வழியும் மனிதரை தெரிந்துகொள்ள முடிந்துள்ளது. நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் செய்தியாளர் ஒரு வீடியோ பதிவை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


    அதில், ‘40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சாலையில் ஓரத்தில் மயக்க நிலையில் இருந்த குரங்கின் நெஞ்சை அழுத்தி அதன் இதயத்துடிப்பை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்கிறார். அந்த குரங்கு எழும்பாத நிலையில் அதன் வாயோடு வாய் வைத்து மூச்சைக் கொடுக்கிறார். அதன் பிறகு குரங்கு எழுகிறது. குரங்கு உயிர்பிழைத்ததை பார்த்து மகிழ்ச்சியின் உச்சத்துக்கு செல்கிறார். இந்தச் சம்பவம் பெரம்பலூரில் நடைபெற்றதாக நிருபர் குறிப்பிட்டுள்ளார். அந்த நபருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Monkey

    அடுத்த செய்தி