விஏஓ உடனான பழக்கத்தை கைவிட மறுத்த மனைவி... கடிதம் எழுதிவைத்து கணவர் தற்கொலை!

விஏஓ உடனான பழக்கத்தை கைவிட மறுத்த மனைவி... கடிதம் எழுதிவைத்து கணவர் தற்கொலை!
தற்கொலை செய்துகொண்ட வேலுச்சாமி
  • News18
  • Last Updated: February 11, 2020, 4:32 PM IST
  • Share this:
திருப்பூரில் விஏஓ உடனான பழக்கத்தை மனைவி கைவிட மறுத்ததால் உருக்கமான கடிதம் எழுதிவைத்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டார். விஏஓவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவியாளராக 34 வயது பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் 49 வயதான வேலுச்சாமி தனியார் கார் ஓட்டுனராக இருந்து வந்தார்.

காதல் திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்நிலையில் வேலுச்சாமியின் மனைவி, மாம்பாடி கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றும் 40 வயதான சுரேஷ் என்பவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார்


இது குறித்து அறிந்த வேலுச்சாமி தனது மனைவியிடம் பல முறை எச்சரித்தும் சுரேஷ் உடனான பழக்கத்தை கைவிடாமல் தொடர்ந்து வந்துள்ளார்.

இதனால் இருவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தனது கணவரை பிரிந்து வாடகைக்கு தனியாக வீடு எடுத்து குழந்தைகளுடன் அந்த பெண் வசித்து வந்துள்ளார். அங்கு வசித்தபடியே வேலுச்சாமியின் மனைவி விஏஓ சுரேஷ் உடனான பழக்கத்தை தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

சுரேஷ் உடன் அடிக்கடி தனது மனைவி சந்தித்து பேசுவதை பார்த்த சிலர் ஞாயிற்றுக்கிழமை வேலுச்சாமி இடம் விசாரித்துள்ளனர். இதனால் அவமானம் தாங்க முடியாத வேலுச்சாமி மன உளைச்சலுடன் உப்புத்துறையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்திங்கட்கிழமை காலை வெகு நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் அருகில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக உள்ளே பார்த்துள்ளனர். அப்போது வேலுச்சாமி மனைவியின் சேலையில் தூக்கிட்டு தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு சென்ற தாராபுரம் போலீசார் வேலுச்சாமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் வேலுச்சாமி கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில் தனது சாவுக்கு மாம்பாடி கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ் என்பவர் தான் காரணம் என்று எழுதி இருந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சுரேஷிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணுடன் பழகியதும் தெரியவந்தது. இதனையடுத்து தாராபுரம் போலீசார் விஏஷ சுரேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also see...
First published: February 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading