• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உடல்நலக்குறைவால் உயிரிழந்த மனைவி : இரண்டு மகன்களுடன் கணவர் தற்கொலை!

உடல்நலக்குறைவால் உயிரிழந்த மனைவி : இரண்டு மகன்களுடன் கணவர் தற்கொலை!

சுந்தர் மற்றும் அவரது குடும்பத்தினர்

சுந்தர் மற்றும் அவரது குடும்பத்தினர்

  • Share this:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மனைவி இறந்த துக்கத்தில் தனது இரண்டு மகன்களுக்கு விஷம் கொடுத்து தந்தையும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

அலங்காநல்லூர் அருகிலுள்ள அரியூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர் வயது (42), விவசாய கூலியான இவரது மனைவி இந்துமதி கடந்த சில மாதங்கள் முன் ஆயுத பூஜை அன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இதனால் கடும் மன அழுத்தத்தில் இருந்த சுந்தர் நேற்று இரவு தனது மகன்களான சுனில் (13) மற்றும் விமல் (9) உள்ளிட்ட இருவருக்கும் விஷத்தை கொடுத்துள்ளார். இதில் இரண்டு சிறுவர்களும் உயிரிழந்த நிலையில், சுந்தரும் அதே விஷத்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

இன்று காலை வீட்டில் தந்தை மகன்கள் மூவரும் பிணமாக கிடப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர் அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேதங்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அரியூர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: