மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்தவரை கல்லால் அடித்துக் கொலை செய்த கணவர்

மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்தவரை கல்லால் அடித்துக் கொலை செய்த கணவர்

மாதிரிப் படம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மனைவியிடம் தகாத உறவு வைத்திருந்த நபரை கல்லால் அடித்துக் கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 • Share this:
  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மனைவியிடம் தகாத உறவு வைத்திருந்த நபரை கல்லால் அடித்துக் கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

  சிவகாசி அருகே நாராயணபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ்குமார் - தனலட்சுமி தம்பதி, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.

  விக்னேஷ்குமார் சிவகாசியில் வசித்த நிலையில், சாத்தூர் அருகே படந்தாலில் வசித்த தனலட்சுமிக்கும், அதே ஊரைச் சேர்ந்த சதீஷ் என்ற இளைஞருக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

  இந்நிலையில், புதன்கிழமை இரவு தனலட்சுமி வீட்டிற்கு கணவர் வந்தபோது, அங்கு சதீஷ் இருந்துள்ளார். இதைப்பார்த்து, ஆத்திரமடைந்த விக்னேஷ்குமார், அவரை கல்லால் அடித்துவிட்டு தப்பியோடினார்.

  Also read... கணவனைக் கொன்று புதைத்த மனைவி... 18 நாட்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை

  படுகாயமடைந்த சதீஷை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய விக்னேஷை தேடி வருகின்றனர்.
  Published by:Vinothini Aandisamy
  First published: