மனைவியைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவர் - புதுச்சேரியில் பரபரப்பு

மனைவியைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவர் - புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரியில் இரு குழந்தைகளுக்கு தந்தையான ஒருவர் தனது மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

புதுச்சேரியில் இரு குழந்தைகளுக்கு தந்தையான ஒருவர் தனது மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

  • Share this:
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் சுனாமி குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (41). மீனவரான இவர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சில மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இவரது மனைவி மேனகா (37). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மன அழுத்தம் காரணமாக கணவன் - மனைவிக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ள நிலையில், கோபமடைந்த சுப்பிரமணி வீட்டிலிருந்த சிலிண்டரை எடுத்து தனது மனைவி மேனகா தலையில் போட்டுள்ளார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதைப் பார்த்து பயந்த சுப்பிரமணி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த முத்தியால்பேட்டை போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் இச்சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் இதுகுறித்து மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see:
Published by:Rizwan
First published: