மனைவியை ஊராட்சித் தலைவராக்க நண்பர்களுக்கு மதுவில் விஷம் கலந்துகொடுத்த கணவர்!

தனது மனைவியை துணைத் தலைவராக கொண்டுவருவதற்கு செந்தில் குமார் இடைஞ்சலாக இருப்பார் என்று கருதியுள்ளார் ஆறுமுகம்.

மனைவியை ஊராட்சித் தலைவராக்க நண்பர்களுக்கு மதுவில் விஷம் கலந்துகொடுத்த கணவர்!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: January 11, 2020, 4:26 PM IST
  • Share this:
நாமக்கல் மாவட்டத்தில் தனது மனைவியை துணைத் தலைவராகக் கொண்டுவருவதற்கு தனது நண்பர்கள் இருவருக்கு மதுவில் விஷம் கலந்துகொடுத்துள்ளார். அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நாமக்கல் மாவடம் கபிலர்மலை ஊராட்சிப் பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் மற்றும் தியாகராஜன் என்ற இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டு பரமத்தி வேலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், இருவரும் மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் செந்தில் குமார் உயிரிழந்தார்.

தியாகராஜனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுதொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த மாதம் 30-ம் தேதி இருக்கூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே, செந்தில் குமார், தியாகராஜன் ஆகிய இருவரும் சரவணன், சுப்பையா ஆகிய இருவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்’ என்பது தெரியவந்தது. மேலும், செந்தில்குமாரின் மனைவியும், ஆறுமுகத்தின் மனைவியும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


அதில், தனது மனைவியை துணைத் தலைவராக கொண்டுவருவதற்கு செந்தில் குமார் இடைஞ்சலாக இருப்பார் என்று கருதியுள்ளார் ஆறுமுகம். எனவே, செந்தில் குமாருக்கும் அவரது நண்பர் தியாகராஜனுக்கு மதுவில் விஷம் கலந்துகொடுத்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஆறுமுகம், சரவணன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துவிசாரணை செய்துவருகின்றனர்.

Also see:
First published: January 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading