Home /News /tamil-nadu /

சொத்துக்காக தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்... வெளியான சிசிடிவி காட்சிகள்!

சொத்துக்காக தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்... வெளியான சிசிடிவி காட்சிகள்!

அண்ணனே தம்பியை கொலை செய்த காட்சி

அண்ணனே தம்பியை கொலை செய்த காட்சி

தருமபுரியில் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பியை வழிமறித்து அண்ணன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தருமபுரி, அடுத்த சத்யா நகரைச் சேர்ந்த காவேரி- சக்தி தம்பதிக்கு 5 மகன்கள் மற்றும் 3 மகள்கள்.

மூன்று மகள்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வரும் நிலையில், மூத்த மகன் வெங்கடாசலம் திருமணமாகி மனைவி, 2 குழந்தைகளுடன் அக்கா முனியம்மா வீட்டில் தங்கி உள்ளார்.

தந்தை காவேரி மறைவுக்கு பின் அவரது பெயரில் கொல்லகொட்டாய் பகுதியில் உள்ள 75 சென்ட் சொத்துக்காக சகோதரர்களுக்குள் தகராறு இருந்து வந்துள்ளது.

வெங்கடாசலத்திற்கும், சத்யா நகரில் வசித்துவரும் 24 வயதான அவரது தம்பி நரசிம்மனுக்கும் அடிக்கடி சொத்து தகராறு நடந்து வந்துள்ளது.

இந்த தகராறு முற்றியதால், காவல்நிலையம் வரை சென்று பஞ்சாயத்து செய்து தீர்த்து வைக்கப்பட்டது. எனினும் இருவருக்கும் இடையில் சொத்து தகராறு தொடர்ந்து வந்துள்ளது.

இந்நிலையில், வியாழக்கிழமை குமாரசாமிபேட்டையில் உள்ள சந்தோஷ் திரையரங்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் நண்பர் மணியுடன் நரசிம்மன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த அண்ணன் வெங்கடாசலம், தம்பி நரசிம்மனை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நெஞ்சு பகுதியில் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் நரசிம்மன் கீழே சரிந்தார்.



வெங்கடாசலத்தை தடுக்க, நரசிம்மனுடன் வந்த அவரது நண்பர் மணி முயன்றபோது, அவரையும் கத்தியால் குத்த முயன்றுள்ளார். சாலையில் நின்றவர்கள் தாக்க வந்ததால் அவர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்.

கத்திக்குத்து சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தருமபுரி போலீசார் நரசிம்மனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

 நரசிம்மன் உயிரிழப்பு தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த தருமபுரி போலீசார், தம்பியை கொலை செய்துவிட்டு தலைமறைவாகிய அண்ணன் வெங்கடாசலத்தை தேடி வருகின்றனர். மேலும், இந்த கொலை சொத்துக்காக மட்டுமே நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Also Watch: டேட்டிங் செயலி மூலம் 50 வயதுக்கு மேற்பட்டவர்களை வரவழைத்து வழிப்பறி!
Published by:Anand Kumar
First published:

Tags: CCTV Footage, Dharmapuri

அடுத்த செய்தி