நெரிசலில் சிக்கி மறுபடியும் மாரடைப்பு ஏற்பட்டுவிடுமோ...! தண்ணீர் லாரியை கண்டாலே பதறும் ஆனந்த்

நோய்களுடன் போராடும் ஒரு தம்பதி தண்ணீருக்காக போராடும் சூழலையும் இந்த தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுத்தியுள்ளது.

news18
Updated: June 14, 2019, 11:44 AM IST
நெரிசலில் சிக்கி மறுபடியும் மாரடைப்பு ஏற்பட்டுவிடுமோ...! தண்ணீர் லாரியை கண்டாலே பதறும் ஆனந்த்
மாரடைப்பு ஏற்பட்ட ஆனந்த்
news18
Updated: June 14, 2019, 11:44 AM IST
சென்னையில் முறையாக குடிநீர் விநியோகிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறமிருக்க, குடிநீர் பிரச்னையால் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. 

உயிர் வாழ ஒரு சொட்டு நீருக்காக உயிரையும் பணயம் வைக்கும் அளவிற்கு தண்ணீர் தட்டுப்பாடு மக்களை பிடித்து ஆட்டிவருகிறது. தலைநகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தால் தண்ணீர் தேடி அலைந்தும், லாரியில் வரும் தண்ணீரை பிடிக்க முட்டி மோதிக்கொண்டும் கஷ்டப்பட்ட ஆனந்த் என்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது அவரது குடும்பத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவரும் மயிலாப்பூரைச் சேர்ந்த ஆனந்த் என்பவர், குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்துவருகிறார். மெட்ரொ லாரி நீரை மட்டுமே நம்பி வாழும் இப்பகுதி மக்கள், லாரியை கண்ணில் கண்டால் போருக்கு போவதை போல குடங்களுடன் லாரியை சூழ்ந்துகொள்வர்.

முட்டி மோதி தண்ணீர் லாரியில் 5 முதல் 8 குடங்கள் குடிநீர் பிடிப்பதற்குள் வயதானவர்களுக்கு ரத்தக் கொதிப்பு அதிகரித்துவிடும். தண்ணீர் லாரி போர்க்களத்தில் அப்படியொரு மாரடைப்பை சந்தித்துள்ளார் ஆனந்த்

தண்ணீர் பிடிக்கப்போய் மாரடைப்பு ஏற்பட்டுவிட்டதே என அக்கம்பக்கத்தினர் நலம்விசாரித்துவரும் நிலையில், தண்ணீர் லாரி வந்தாலே ஆனந்திற்கு பயம் தொற்றிக்கொள்கிறது. இதனால் கணவனை கவனித்துக்கொண்டு குடும்ப சுமையை சுமந்துவரும் ஆனந்தின் மனைவி சியாமளா குடிநீர் எடுக்கும் சுமையையும் தனதாக்கிக்கொண்டார்.

மனைவியை விட்டுக்கொடுக்காத ஆனந்த் அவ்வப்போது, மிகுந்த கவனமுடன் இருசக்கர வாகனத்தில் சென்று குடிநீர் கொண்டுவருகிறார். ஆனால், அதுவும் வேண்டாம் என அவரது மனைவி கூறியுள்ளார்.

சென்னையில் வாழும் ஒரு சமானியனை இதய நோயாளியாக மாற்றும் அளவிற்கு இந்த தண்ணீர் பஞ்சம் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Loading...
Also see...

First published: June 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...