இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய 3 பேர் மீது வழக்கு.. ஒருவர் கைது..

இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய 3 பேர் மீது வழக்கு.. ஒருவர் கைது..

சாலமோன் மற்றும் ஜான்சன்

இதனையடுதது முக்கூடல் சாலமோன் மற்றும் அவரது நண்பர்கள் மனோ மற்றும் ஜான்சன் ஆகிய 3 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ததோடு சாலமோனை கைது செய்தனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  நெல்லை மாவட்டம் முக்கூடலில் இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டி நகை பணம் பறித்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் சாலமோன் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் பழக்கம் காதலாக மாறிய நிலையில் தனிமையில் இருவரும் சந்தித்து வந்துள்ளனர்.

  அவர்கள் நெருக்கமாக இருந்ததை பெண்ணுக்கு தெரியாமல் சாலமோன் வீடியோ மற்றும் புகைப்பட்ம் எடுத்துள்ளார். ஆபாசமாக இருக்கும் படத்தை காட்டி அவர் அந்த பெண்ணிடம் பலமுறை பணம் கேட்டு மிரட்டியுள்ளார். சில முறை பணம் பெற்றதாகவம் தெரிகிறது.

  இந்த விவகாரம் பெண்ணின் வீட்டாருக்கு தெரியவரவே கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் முடித்து வைத்துள்ளனர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த சாலமோன் தொடர்ந்து பெண்ணிற்கு தொலைபேசி வாயிலாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். பணம் கேட்டு தொந்தரவு செய்ததோடு தன்னிடமும் தனது நண்பர்களிடமும் நெருக்கமாக இருக்க வேண்டும் எனவும் நிர்பந்தித்துள்ளார்.

  சில தினங்களுக்கு முன்னர் கணவர் வீட்டில் இல்லை என்பதை அறிந்து நேரடியாக வீட்டிற்கு சென்று மிரட்டியதோடு பெண் அணிந்திருந்த நகை மற்றும் பணத்தை பறித்து சென்றுள்ளார் சாலமோன். இது குறித்து பெண்ணின் குடும்பத்தார் ஆலங்குளம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

  Also read... மகள்களுக்கு சொத்து கொடுக்க நினைத்ததால் தாயைக்கொன்ற மகன்கள், பேரன்கள்..  அவர்கள் நடவடிக்கை ஏதும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் சேரன்மாதேவி உதவிபோலீஸ் சூப்பிரண்டு பிரதீப்பிடம் குடும்பத்துடன் சென்று முறையிட்டதாக தெரிகிறது. அவர் நடவடிக்கையில் இறங்கவே முக்கூடல் காவல் நிலையத்தில் புகாரை பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

  இதனையடுதது முக்கூடல் சாலமோன் மற்றும் அவரது நண்பர்கள் மனோ மற்றும் ஜான்சன் ஆகிய 3 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ததோடு சாலமோனை கைது செய்தனர். மேலும் மனோவை தேடி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஜான்சன் ஏற்கனவே ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  Published by:Vinothini Aandisamy
  First published: