மகளை கருணைக் கொலை செய்ய வேண்டும்... ஆட்சியரிடம் மனு கொடுத்த தந்தை!

மகளை கருணைக் கொலை செய்ய வேண்டும்... ஆட்சியரிடம் மனு கொடுத்த தந்தை!
முருகையா உடன் அவரது மகள் சுப்புலஷ்மி மற்றும் அவரது மனைவி
  • News18
  • Last Updated: December 9, 2019, 5:30 PM IST
  • Share this:
தென்காசியில் பெற்ற மகளை கருணை கொலை செய்ய கோரி தந்தை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலூகாவுக்கு உட்பட்ட கொட்டாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகையா. 68-வயதான இவருக்கு 35 வயதுடைய சுப்புலஷ்மி என்ற மகள் உள்ளார்.

தாடை விலங்கு நோயால் பல ஆண்டு காலமாக பாதிக்கப்பட்ட சுப்புலஷ்மியை தொடர்ந்து பராமரிக்க இயலாததால் கருணைக் கொலை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் முருகையா மனு அளித்துள்ளார்.


இது தொடர்பாக செய்தியாளரிடம் பேசிய முருகையா, நான் ஒரு கூலி தொழிலாளி. தற்போது எனக்கும் எனது மனைவிக்கும் வயது முதிர்ந்த நிலையில் எங்களால் நோயுற்றுள்ள மகளை கவனித்துக்கொள்ள முடியவில்லை.

கடந்த 25 ஆண்டு காலமாக நோய் வாய்ப்பட்டு இருந்த என் மகளை கடந்த 2016-ம் ஆண்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரனிடம், என்னால் மருத்துவம் செய்ய முடியவில்லை என்றும் குடியிருக்க வீடு இல்லை எனவும், தனது மகளை கருணைக் கொலை செய்ய மனு அளித்ததாகவும்  முருகையா தெரிவித்தார்.

இந்நிலையில், இதுவரை எந்த அரசு உதவியும் கிடைக்காததாலும் வயது முதிர்வால் மகளை கவணித்துக்கொள்ள முடியாத காரணத்தாலும் கருணை கொலை செய்யக்கோரி தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்ததாக முருகையா தெரிவித்துள்ளார்.Also see...
First published: December 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading