நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டவர் மரணம்: இறந்து ஒன்றரை நாளுக்கு பின் கண்டுபிடிப்பு..

சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் உயிரிழந்தார்.

நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டவர் மரணம்: இறந்து ஒன்றரை நாளுக்கு பின் கண்டுபிடிப்பு..
மாதிரிப் படம்
  • Share this:
சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்த சுந்தரவேல் என்பவர் கடந்த 25-ஆம் தேதி சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.

சுந்தர வேலுக்கு சென்னையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவு கிடைக்கும் வரை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அவர் தங்க வைக்கப்பட்டார்.இரண்டு நாளாக குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளாததால் சந்தேகமடைந்த அவருடைய மனைவி சந்திரா, தனியார் நட்சத்திர விடுதிக்கு தொடர்புகொண்டு தனது கணவர் குறித்த விவரம் கேட்டுள்ளார்.

Also read... போலியான முகவரியால் குழப்பம்... கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம்..அதன் பிறகு நேற்று முன் தினம் இரவு சுந்தரவேல் அறையை சோதனையிட்ட விடுதி ஊழியர்கள் அறையிலேயே இறந்து கிடந்ததை கண்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட தேனாம்பேட்டை போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு கொரோனா நோய் தொற்று இல்லை என்பதும் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து நடிகரும், திமுக இளைஞர் அணி தலைவருமான உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உயிரிழந்த சுந்தரவேலின் மனைவி வெளியிட்டுள்ள வீடியோவை பதிவிட்டு, ஹோட்டல்ல தனிமைப்படுத்தின என் வீட்டுக்காரரை அழுகிய நிலையில் போஸ்ட்மார்டம் பண்ணி பிணமா கொடுத்துட்டாங்க சார்’ - கதறி அழும் சந்திராவை தேற்ற வார்த்தைகள் இல்லை. சிங்கப்பூரிலிருந்து வந்த இவரின் கணவருக்கு கொரோனா கிடையாது. சென்னை ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டவர் குளியலறையில் இறந்துள்ளார் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading