பூஜையின்போது சந்தேகப் பொருள் வெடித்து சாமியார் உயிரிழப்பு!

நேற்று மாலை சாமியார் கோவிந்தராஜ் தன் வீட்டில் உள்ள ஒரு அறையில் பூஜை செய்து கொண்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று வெடித்துள்ளது. 

பூஜையின்போது சந்தேகப் பொருள் வெடித்து சாமியார் உயிரிழப்பு!
நேற்று மாலை சாமியார் கோவிந்தராஜ் தன் வீட்டில் உள்ள ஒரு அறையில் பூஜை செய்து கொண்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று வெடித்துள்ளது. 
  • News18
  • Last Updated: September 26, 2019, 2:12 PM IST
  • Share this:
திருவள்ளூர் அருகே சந்தேகத்திற்கிடமான பொருள் வெடித்ததில் சாமியார் ஒருவர் உயிரிழந்தார்.

சென்னை நங்கநல்லூரை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் திருவள்ளூர் அடுத்த இறையாமங்கலம் பகுதியில் தனியாக வீடு கட்டி வசித்து வருகிறார். இவர் சித்த வைத்தியம், ஜோதிடம், சம்பிரதாய பூஜைகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை சாமியார் கோவிந்தராஜ் தன் வீட்டில் உள்ள ஒரு அறையில் பூஜை செய்து கொண்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று வெடித்துள்ளது.


இந்த சத்தம் கேட்டு மற்றொரு அறையில் இருந்த அவரது சிஷியை லாவண்யா வந்து பார்த்தபோது, உடலில் பலத்த தீக்காயங்களுடன் கோவிந்தராஜ் வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார்.

இதை பார்த்த பொதுமக்கள் அவரை காப்பாற்றி காரில் ஏற்ற முயன்ற போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோவிந்தராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சாமியார் கோவிந்தராஜ் உடலில் தீப்பற்ற காரணம் என்ன என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Loading...

Also see...

First published: September 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...