’என் சாவுக்கு காவல் அதிகாரிதான் காரணம்’ - கட்டடத் தொழிலாளி தற்கொலை: மற்றொரு மரணத்தால் தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காவல்துறையினர் தாக்கியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டிவருகின்றனர்.

’என் சாவுக்கு காவல் அதிகாரிதான் காரணம்’ - கட்டடத் தொழிலாளி தற்கொலை: மற்றொரு மரணத்தால் தூத்துக்குடியில் பரபரப்பு
தூத்துக்குடி தற்கொலை
  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மொபைல்போன் கடை வைத்திருந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருவரும் அடுத்தடுத்து சிறையில் உயிரிழந்தனர். அதனையடுத்து, இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தேசிய அளவில் ராகுல்காந்தி, பிரியங்கா சோப்ரா, ஷிகர் தவான் உள்ளிட்ட பலரும் இந்த விவகாரத்துக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்துவருகின்றனர்.

இந்தவிவகாரம் தொடர்பாக குற்றம்சாட்டப்படும் எஸ்.ஐ இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அந்த காவல்நிலையத்தின் காவல் ஆய்வாளர் கட்டாய காத்திருப்புக்கு மாற்றப்பட்டுள்ளார். மீதமுள்ள காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களும், பொதுமக்களும் கைது நடவடிக்கையை வலியுறுத்திவரும் நிலையில் இதுவரையில் ஒருவரும் கைது செய்யப்படவில்லை. இதற்கிடையில், அதே தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி அருகே எட்டயப்புரத்தில் கணேசமூர்த்தி என்பவர் வசித்து வந்தார். அவருக்கு வயது 29. கட்டிடத் தொழிலாளியான இவர், கடந்த சனிக்கிழமை மாலை மதுபோதையில் பைக்கில் சென்றபோது தவறிவிழுந்துள்ளார்.

அவரை, காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்ற உளவுத்துறை காவல்துறை அதிகாரி கார்த்தி நான்கு காவலர்களுடன் சேர்ந்து கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வைக்கப்பட்டுள்ளது.தற்கொலை செய்துகொண்ட கணேசமூர்த்தி, அவரது மகனின் பள்ளி நோட்டில் தனது மரணத்துக்கு காரணம் உளவுத்துறை அதிகாரி கார்த்தி தான் காரணம் என எழுதிவைத்துள்ளார். அதனால், எட்டயபுரம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
First published: June 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading