Home /News /tamil-nadu /

150 சவரன் நகை, ரூ.9 லட்ச ரோலக்ஸ் வாட்ச்சை சீர்வரிசையாக வாங்கி ஏமாற்றும் நபர்- காவல்துறையில் இரண்டு மனைவிகள் புகார்

150 சவரன் நகை, ரூ.9 லட்ச ரோலக்ஸ் வாட்ச்சை சீர்வரிசையாக வாங்கி ஏமாற்றும் நபர்- காவல்துறையில் இரண்டு மனைவிகள் புகார்

திருமணம் செய்து ஏமாற்றியவர்

திருமணம் செய்து ஏமாற்றியவர்

150 சவரன் நகை, 9 லட்ச ரூபாய் ரோலக்ஸ் வாட்ச்சை சீராக வாங்கிக் கொண்டு திருமணம் செய்து ஏமாற்றியதாக சிங்கப்பூர் காவல்துறை அதிகாரி மீது இரண்டு பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

பெண்களை ஏமாற்றி தொடர் திருமணம் செய்து வரும் சிங்கப்பூர் காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் மீது பாதிக்கப்பட்ட பெண் வீட்டார் திருவாரூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து முகம்மது ரபீக், இரண்டாவது திருமணம் செய்து ஏமாற்றிய தூத்துக்குடி பெண் அனீஸின் தகப்பனார் சம்சுதீன் தனது மகளை ஏமாற்றி திருமணம் செய்த ரபீக் மீது நடவடிக்கை எடுக்க கோரி  இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவரிடம் புகார் அளித்தார்.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் முகமதுரபிக். இவர் சிங்கப்பூர் காவல்துறையில் உயரதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கூத்தாநல்லூரை அடுத்துள்ள அத்திக்கடை எனும் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இதற்காக பெண் வீட்டாரிடம் இருந்து 150 சவரனுக்கு மேல் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த கை கடிகாரம் ஆகியவற்றையும் சீர்வரிசையாக பெற்றுக்கொண்டுள்ளார்.

பின்னர் மனைவியின் நடத்தையில் சந்தேகம் எனகூறி மனைவியை விவாகரத்து செய்துள்ளார். பிறகு தனது சொந்த ஊரான நீடாமங்கலத்திற்கு வந்த முகமது ரபீக், மீண்டும் 150 சவரன் நகைகள், விலை உயர்ந்த கை கடிகாரம் என சீர்வரிசையாக பெற்றுக்கொண்டு தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டு அவருடனும் சிலகாலம் வாழ்ந்துவிட்டு. பின்னர், 2வது மனைவி மீதும் வழக்கம்போல நடத்தை சரியில்லை என பழிபோட்டுவிட்டு அவரையும் விவாகரத்து செய்துள்ளார்.

இந்தநிலையில், தற்போது மூன்றாவது முறையாக தாயகம் திரும்பிய முகமது ரபிக் தனது மூன்றாவது திருமண அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். அதாவது தஞ்சை மாவட்டம், மதுக்கூர் பகுதியில் உள்ள செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் வகையில் பெண் வீட்டாரிடம் மிடுக்கான காவல்துறையில் அதுவும் வெளிநாட்டு காவல்துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றுவதாக கூறி அடுத்த டார்க்கெட்டை தொடங்கியுள்ளார் முகமதுரபிக்.

வருடத்திற்கு ஒரு மனைவி என தனது வாழ்க்கையை அனுபவித்துவிட்டு, அதன் பின்னர் பெண் வீட்டார் கொடுத்த சீர்வரிசை பொருட்களை அபகரித்துகொள்வதற்காக பெண்ணின் நடத்தையில் பழியைபோடும் முகமதுரபிக்கிடம், இனி எந்தவொரு பெண்ணும் ஏமாந்து விடகூடாது என்ற நோக்கத்தில் முதல் மனைவியின் குடும்பத்தார், முகமதுரபிக் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி திருவாரூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ் ரவியாக செயல்படுகிறார் - திருமாவளவன் காட்டம்

இந்நிலையில் முகமது ரபீக், இரண்டாவது திருமணம் செய்து ஏமாற்றிய தூத்துக்குடி பெண் அனீஸின் தகப்பனார் சம்சுதீன் மற்றும் குடும்பத்தார் தங்களது மகளை ஏமாற்றி திருமணம் செய்த சிங்கப்பூரைச் சார்ந்த முகம்மது ரபீக் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் திருமணத்தின் போது வாங்கிய சீர்வரிசைப் பொருட்களான 150 சவரன் தங்க நகை மற்றும் ரூ 9 லட்சம் மதிப்பிலான ரோலக்ஸ் வாட்ச் உள்ளிட்ட பொருட்களை மீட்டு தருமாறு கோரி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
Published by:Karthick S
First published:

Tags: Crime News

அடுத்த செய்தி