• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அழகான இளைஞர் படத்தைவைத்து ஃபேஸ்புக் மூலம் காதல்: 15 பெண்களை ஏமாற்றி பணம் பறித்த ரோமியோ கைது

அழகான இளைஞர் படத்தைவைத்து ஃபேஸ்புக் மூலம் காதல்: 15 பெண்களை ஏமாற்றி பணம் பறித்த ரோமியோ கைது

Youtube Video

பேஸ்புக்கில், அழகான இளைஞர்களின் படங்களைப் பயன்படுத்தி கல்லூரி மாணவியரிடம் காதலிப்பதாக சாட்டிங் மட்டும் செய்து, நகை பணம் பறித்த இளைஞரைப் போலீசார் கைது செய்துள்ளனர். 

  • Share this:
    வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க ஆசைப்பட்ட லோகேஷ், பேஸ்புக்கைப் பயன்படுத்தி குறுக்குவழியில் செல்ல நினைத்து தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

    சென்னையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் ஒரு புகார் அளித்திருந்தார்.

    அதில், நிஷாந்த் என்பவர், தன்னைக் காதலிப்பதாக நாடகமாடி வாட்ஸ் ஆப்பில் சாட்டிங் செய்ததாகவும் அந்த சாட்டிங்கை வெளியிட்டு விடுவதாகக் கூறி மிரட்டி தன்னிடம் இருந்து பணம், நகை பறித்ததாகவும் தெரிவித்திருந்தார்.

    இளம்பெண் அளித்த செல்போன் எண் அடிப்படையில் போலீசார் விசாரித்தபோது, திருமுல்லைவாயிலைச் சேர்ந்த 26 வயதான லோகேஷ் என்ற இளைஞர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பிளஸ் 2 முடித்து விட்டு, பிஈ பட்டப்படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார் லோகேஷ்.  பணத்திற்கு திண்டாட்டம் ஏற்பட்டதால், நோகாமல் பணம் சம்பாதிக்க எளிய வழியைக் கண்டுபிடித்துள்ளார்.

    அதன்படி பேஸ்புக்கில், நிஷாந்த், விமலேஷ், விமல் என்ற போலி பெயர்களில், அழகான இளைஞர்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி போலி முகவரிகளை உருவாக்கியுள்ளார்.

    அந்த முகவரிகளின் மூலம் கல்லூரி மாணவியர் மற்றும் திருமணமான பெண்களுடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.  நாளடைவில் அவர்களின் வாட்ஸ் ஆப் எண்களைப் பெற்று சாட்டிங் செய்து வந்துள்ளார்.

    ஒருகட்டத்தில் அவர்களைக் காதலிப்பதாக நாடகமாடி, குடும்பச் செலவு, மருத்துவச் செலவு எனக் கூறி நகை, பணம் பறித்துள்ளார்.  அதை நம்பாத பெண்களை அந்தரங்க உரையாடல் செய்யும் அளவுக்கு பழகி விட்டு பின்னர் அந்த உரையாடல்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டி நகை, பணம் பறித்துள்ளார்.

    மருந்து மாத்திரைகள் என குறிப்பிட்டு நகைகளை, கூரியரில் அனுப்பச் சொல்லி வாங்கியிருக்கிறார் லோகேஷ். இப்படி 15 பெண்களிடம் இருந்து பதிமூன்றரை சவரன் நகைகளையும், லட்சக்கணக்கான ரூபாயையும் பறித்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

    சென்னை, கன்னியாகுமரி, கோயமுத்தூர், திண்டுக்கல், மதுரை, திருச்சி மற்றும் புதுச்சேரி என தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த பெண்களும், மலேசியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணும் இவரால் பாதிக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது

    இந்தப் பெண்களை லோகேஷ் ஒரு முறை கூட நேரில் பார்க்கவில்லை என்கின்றனர் போலீசார். லோகேஷைக் கைது செய்த போலீசார், அவர் எத்தனை பெண்களை இப்படி மோசடி செய்து நகை, பணம் பறித்துள்ளார் என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: