திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஒரக்காடு அல்லிமேடு பகுதியை சேர்ந்த செல்வம். இவரது மகன் அஜித் வயது 25. அதே பகுதியை சேர்ந்த கௌதமி வயது 19. உறவினர் பெண்ணான கௌதமி நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார். அப்போது அஜித், கௌதமியை தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி தவறாக நடக்க முயற்சித்துள்ளார். அந்தப் பெண் கத்தி கூச்சல் இட்டும் இரவு நேரம் என்பதாலும் உதவிக்கு யாரும் வராததால் அஜித்திடம் இருந்த கத்தியை பிடுங்கி அவரை சரமாரியாக வெட்டி சாய்த்து உள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே அஜித் உயிரிழந்துள்ளார்.
பின்னர் சோழவரம் காவல் நிலையத்திற்கு சென்ற கவுதமி நடந்த சம்பவத்தை கூறி சரண் அடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த சோழவரம் காவல் துறையினர் உடலை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இக்கொலை குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் எதற்காக கொலை செய்யப்பட்டார். பாலியல் வன்கொடுமை முயற்சியின்போது நடந்த கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் சோழவரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.