பெண்ணின் போட்டோவை மார்ப்பிங் செய்த இளைஞர்! மனமுடைந்து தற்கொலை செய்த காதல் ஜோடி

விரக்தியில் இருந்த ராதிகா, குடும்பத்தினரும் தனக்கு ஆறுதல் தெரிவிக்காமல் முகநூலை பயன்படுத்தியது ஏன் என கண்டித்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

news18
Updated: June 12, 2019, 9:19 AM IST
பெண்ணின் போட்டோவை மார்ப்பிங் செய்த இளைஞர்! மனமுடைந்து தற்கொலை செய்த காதல் ஜோடி
தற்கொலை செய்த காதலர்கள்
news18
Updated: June 12, 2019, 9:19 AM IST
கடலூரில் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியிடப்பட்டதால், மனமுடைந்த அந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். இதையறிந்த அப்பெண்ணின் காதலரும் தற்கொலை செய்துகொண்டார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்துள்ள குறவன்குப்பத்தைச் சேர்ந்தவர் 19 வயது ராதிகா. இவர் தனியார் கல்லுாரியில் பி.சி.ஏ 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், திங்களன்று மாலை, வீட்டில் யாரும் இல்லாத நிலையில் ராதிகா துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். வடலுார் பார்வதிபுரத்தில் வசித்து வந்த, ராதிகாவின் அத்தை மகன் 23 வயதான விக்னேஷ் இந்தத் தகவலைக் கேள்விப்பட்டு கதறியுள்ளார். பின்னர் வடலூரையடுத்த செங்கால்பாளையத்தில் சாலையோரம் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அந்த வழியாகச் சென்றவர்கள் அவரைப் பார்த்து விட்டு அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

ராதிகா வசித்து வந்த குறவன்குப்பத்தைச் சேர்ந்த 21 வயதான பிரேம்குமார், விக்னேஷின் நண்பர் ஒருவரின் தங்கையை காதலித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதலியை பிரேம்குமார் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதால், இரு குடும்பங்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை, காவல்நிலையம் வரை சென்றது

அப்போது, பிரேம்குமார் அவரது காதலியை அழைத்துச் சென்றதை நேரில் பார்த்ததாக விக்னேஷ் காவல்நிலையத்தில் சாட்சியம் அளித்தார். இந்த வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்த அவர், தனக்கெதிராக சாட்சியம் அளித்த விக்னேஷை பழிவாங்க தருணம் பார்த்து காத்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், விக்னேஷுக்கும் அவரது மாமன் மகள் ராதிகாவுக்கும் திருமணம் செய்வது குறித்து உறவினர்கள் பேசி முடித்திருப்பது பிரேம்குமாருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து ராதிகாவின் முகநூல் கணக்கில் இருந்து அவரது புகைப்படத்தை எடுத்து அதை மார்ஃபிங் செய்து ஆபாச புகைப்படமாக மாற்றி முகநுாலில் வெளியிட்டுள்ளார். இதனால் விரக்தியில் இருந்த ராதிகா, குடும்பத்தினரும் தனக்கு ஆறுதல் தெரிவிக்காமல் முகநூலை பயன்படுத்தியது ஏன் என கண்டித்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதன் காரணமாக, திங்களன்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் ராதிகா துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

ஃபேஸ்புக்கில் மார்பிங் படத்தால் இளம்பெண் தற்கொலை: ராமதாஸ் கண்டனம்

ராதிகா உயிரை மாய்த்துக்கொண்ட தகவலைக் கேள்விப்பட்ட அவரது காதலரும், அத்தை மகனுமான விக்னேஷ், தன்னால்தான் ராதிகாவுக்கு இந்த முடிவு ஏற்பட்டது என்று கருதி அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

முகநூலில் ராதிகா குறித்து ஆபாச பதிவிட்ட பிரேம்குமாரின் வீட்டை ராதிகாவின் உறவினர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். குற்றவாளியைக் கைது செய்யக் கோரி, நெய்வேலி மந்தாரகுப்பம் காவல்நிலையத்தில் ராதிகாவின் உறவினர்கள் புகாரளித்தனர். பின்னர் விருத்தாசலம் - கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தலைமறைவாக இருந்த பிரேம்குமார், கடலுார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்த நிலையில், அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Also see:

First published: June 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...