• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உஷார்! ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்து 40 ஆயிரம் ரூபாய் ஏமாந்த கல்லூரிப் பெண்

உஷார்! ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்து 40 ஆயிரம் ரூபாய் ஏமாந்த கல்லூரிப் பெண்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ப்ரியாவின் முழு கதையையும் கேட்டப்பிறகு, நீங்கள் அனுப்பும் பணம் எங்கள் வங்கி கணக்குக்கு இதுவரை வரவில்லை. எனவே, மீண்டும் 5,000 ரூபாய் அனுப்பினால் உடனடியாக உங்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை திரும்ப அனுப்பிவைக்கிறோம், நன்றி என்று கூறினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஆன்லைனில் பிரியாணியை ஆர்டர் செய்து, போலி போன் கால் மூலம் 40 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளார்.

    வடசென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி, ப்ரியா, சில தினங்களுக்கு முன் ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். அதற்கான, 76 ரூபாயை ஆன்லைனிலேயே செலுத்தியுள்ளார். பிரியாணிக்காக ப்ரியா காத்திருந்தபோது, அவரின் செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது.

    அதில் பிரியாணிக்கான ஆர்டர் கேன்சல் செய்யப்பட்டிருந்தது. பணம் பிடித்தம் செய்யப்பட்டதால் மாணவி, அதை எப்படி திரும்பப் பெறலாம் என சம்பந்தப்பட்ட ஆன்லைனின் சேவை மைய நம்பரை இணையதளத்தில் தேடினார்.

    இணையதளத்திலிருந்து ஒரு நம்பரை எடுத்த ப்ரியா, அதற்கு தொடர்புகொண்டார். எதிர்முனையில் பேசியவர், ப்ரியா கூறிய விவரங்களைக் பொறுமையாகக் கேட்டார். பிறகு, உங்களிடம் பிடித்த தொகை 100 ரூபாய்க்குள் இருப்பதால் அதை திரும்ப அனுப்ப முடியாது.

    அதோடு நாங்கள் மினிமம் பேலன்ஸாக 5,000 ரூபாய் இருந்ததால் மட்டுமே வாடிக்கையாளர்களிடம் பிடித்தம் செய்த பணத்தைத் திரும்ப அனுப்ப முடியும். அதைக்கேட்ட ப்ரியா, 76 ரூபாயை திரும்ப பெற, 5000 ரூபாய் அனுப்ப சம்மதித்தார்.

    இதையடுத்து வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து பேசிய நபர், வங்கி அக்கவுன்ட் நம்பரை ப்ரியாவிடம் கூறினார். உடனடியாக அவரும் ஆன் லைனிலேயே 5,000 ரூபாயை அனுப்பிவைத்தார். அதன்பிறகு 5,076 ரூபாய் வரும் என ஆவலோடு ப்ரியா எதிர்பார்த்து காத்திருந்தார்.

    ஆனால், சேவை மையத்திலிருந்து பேசிய நபர், நீங்கள் அனுப்பிய தொகை எங்கள் வங்கி கணக்குக்கு வரவில்லை என்று கூறியதோடு மீண்டும் 5,000 ரூபாயை அனுப்புமாறு கூறினார். அதை நம்பிய ப்ரியா, அடுத்து 5,000 ரூபாயை அனுப்பிவிட்டு வாடிக்கையாளர் சேவை மையத்துக்குத் தகவல் தெரிவித்தார். அப்போதும் வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து பேசிய நபர், வங்கி கணக்கை செக் செய்துவிட்டு எஸ்.எம்.எஸ் அனுப்புகிறேன். விரைவில் உங்கள் பணத்தை திரும்ப அனுப்புகிறோம், நன்றி என்று தெரிவித்தார்.

    அதன்பிறகும் ப்ரியாவின் வங்கி கணக்குக்கு எந்தப்பணமும் வரவில்லை. இதனால், ப்ரியா மீண்டும் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தொடர்பு கொண்டார். அப்போது பேசிய நபர், ப்ரியாவின் முழு கதையையும் கேட்டப்பிறகு, நீங்கள் அனுப்பும் பணம் எங்கள் வங்கி கணக்குக்கு இதுவரை வரவில்லை. எனவே, மீண்டும் 5,000 ரூபாய் அனுப்பினால் உடனடியாக உங்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை திரும்ப அனுப்பிவைக்கிறோம், நன்றி என்று கூறினார்.

    இதனால் மூன்றாவது முறையாக ப்ரியா, 5,000 ரூபாயை அனுப்பினார். இதன்பிறகும் வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து பணம் திரும்ப அனுப்பப்படவில்லை. அதனால், ஆத்திரமடைந்த ப்ரியா மீண்டும் வாடிக்கையாளர் மையத்துக்கு போன் செய்துள்ளார். மீண்டும், வாடிக்கையாளர் மையத்தினர் போல பேசியவர்களின் பேச்சை நம்பியுள்ளார். இப்படியாக, ப்ரியா தொடர்ந்து 8 முறை 5,000 ரூபாயாக அனுப்பியுள்ளார்.

    அதன்பிறகு, வாடிக்கையாளர் மையத்துக்கு அப்போது, அந்த நம்பர் ஆஃப் செய்து வைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு, தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை ப்ரியா உணர்ந்துள்ளார். 76 ரூபாயைத் திரும்பப் பெறுவதற்காக, 40 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளார். பின்னர், இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில், ப்ரியா புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர், விசாரணை நடத்திவருகின்றனர்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: