Home /News /tamil-nadu /

திமுக பிரமுகர் கொலை வழக்கு: அதிமுக பிரமுகர்களை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி

திமுக பிரமுகர் கொலை வழக்கு: அதிமுக பிரமுகர்களை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி

மாதிரி படம்

மாதிரி படம்

அதிமுக-வில் இருந்து திமுக-வில் இணைந்த சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன், கடந்த 3ம் தேதி என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள பிராட்வே பேருந்து நிலையத்தில் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

  • News18
  • Last Updated :
திமுக பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக பிரமுகர்களை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி வழங்கி ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக-வில் இருந்து திமுக-வில் இணைந்த சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன், கடந்த 3ம் தேதி என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள பிராட்வே பேருந்து நிலையத்தில் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பான காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், போஸ்டர்கள் ஒட்டுவதில் அதிமுக மற்றும் திமுகவினருக்கு இடையே விரோதம் இருந்ததாக கூறப்பட்டது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த அதிமுக பிரமுகர்கள் கணேசன், தினேஷ், கார்த்தி, குமரேசன், இன்பா ஆகிய 5 பேர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஏப்ரல் 4ம் தேதி சரணடைந்தனர்.
நீதிமன்றத்தில் சரணடைந்த 5 பேரையும் விசாரணைக்கு அனுமதிக்க கோரி ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் எஸ்பிளனேட் காவல்துறையினர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Also read... சாத்தான்குளம் வழக்கு - போலீஸ் எஸ்.ஐக்கு ஜாமின் வழங்க சிபிஐ கடும் எதிர்ப்பு

வழக்கை விசாரித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம், அதிமுக பிரமுகர்கள் 5 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க எஸ்பிளனேட் காவல்துறையினருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madras High court

அடுத்த செய்தி