கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தகர பிஸ்கட்டுக்கு தங்க முலாம் பூசி, பேருந்திற்காக காத்திருந்தவரிடம் 3 சவரன் நகையை ஒரு கும்பல் பறித்துச் சென்றுள்ளது.
திருவனந்தபுரம் தைக்காடு பகுதியைச் சேர்ந்த கணேசன், தனது உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சிக்காக நாகர்கோவில் வந்தார். மீண்டும் சொந்த ஊர் செல்ல வடசேரி பேருந்துநிலையம் வந்தவரிடம் டிப்டாப் உடையணிந்து வந்த 3 பேர் நட்பாக பேசியுள்ளனர்.
தங்களிடம் தங்க பிஸ்கெட்டுகள் உள்ளதாகவும், பணப்பிரச்னை காரணமாக அதனை விற்க விரும்புவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
தன்னிடம் பணம் இல்லை என கணேசன் கூற நகையைத் தருமாறு அந்த கும்பல் கேட்டுள்ளது. பேராசை கொண்ட கணேசன் செயின், மோதிரம் என 3 பவுன் நகையை அவர்களிடம் கொடுத்துவிட்டு தங்க பிஸ்கெட்டுகளை வாங்கியுள்ளனர்.
பின்னர் சோதனை செய்து பார்த்ததில் அவை போலியானவை என தெரியவரவே வடசேரி காவல்நிலையத்தில் கணேசன் புகாரளித்துள்ளார்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.