Home /News /tamil-nadu /

இரிடியம் இருப்பதாக கறுப்பு பெட்டியை கொடுத்து ரூ.55 லட்சம் மோசடி: தொழிலதிபரை ஏமாற்றிய மூன்று பேர் கைது!

இரிடியம் இருப்பதாக கறுப்பு பெட்டியை கொடுத்து ரூ.55 லட்சம் மோசடி: தொழிலதிபரை ஏமாற்றிய மூன்று பேர் கைது!

இரிடியம் இருப்பதாக கூறிய பானை

இரிடியம் இருப்பதாக கூறிய பானை

மோசடி கும்பல் கொடுத்த கருப்பு பெட்டியை நேற்று தனிப்படை போலீசார் சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு எடுத்துச் சென்று அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் முன்னிலையில் திறந்து பார்த்தனர்.

  • News18
  • Last Updated :
    சேலத்தில் இரிடியம் தருவதாகக் கூறி 55 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

    சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். வெள்ளிப்பட்டறை அதிபரான இவரிடம் சென்னையைச் சேர்ந்த சிலர் தங்களிடம் இரிடியம் இருப்பதாகவும், அதை விற்றால் பல லட்சம் லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினர்.

    அவர்களது பேச்சில் மயங்கிய பிரவீன் இரிடியத்தை காண்பித்தால் பணம் தருவதாக தெரிவித்துள்ளார். பின்னர் அந்தக் கும்பல் பிரவீன் குமாரை அழைத்துச் சென்று கருப்பு பெட்டி ஒன்றை காண்பித்து இதற்குள் இரிடியம் இருக்கிறது.

    திறந்து பார்த்தால் இறந்து விடுவோம். இதற்கென தனியாக, பிரத்தியேகமாக தயாரிக்கபப்ட்ட உடை அணிந்து கொண்டுதான் இரிடியம் இருக்கும் பெட்டியை திறக்க முடியும் எனக் கூறியுள்ளனர்.

    அப்போது பிரவீன் குமார் இரிடியம் இருக்கும் பெட்டியை திறப்பதற்கான உடை வாங்க எவ்வளவு செலவாகும் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்தக் கும்பல் 55 இலட்சம் ரூபாய் செலவாகும் என்றும், மும்பை சென்று உடையை வாங்கி வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    இதை நம்பிய பிரவீன் குமார் ரூபாய் 55 லட்சத்தை சென்னை கும்பலிடம் வழங்கியுள்ளார். பிறகு சென்னை கும்பல் கருப்பு பெட்டி போன்ற ஒன்றை அவரிடம் கொடுத்து பெட்டியை திறக்கக் கூடாது. திறந்தால் இறந்துவிடுவீர்கள். அதற்கென உரிய உடையை தாங்கள் வாங்கி வந்து விடுவதாக கூறிச் சென்றுள்ளது.

    ஆனால் பல நாட்களாகியும் சென்னை கும்பல் பிரவீன்குமாரை சந்திக்கவில்லை. பிரவீன் குமார் அவ்வப்போது. செல்போனில் இரிடியம் கும்பலிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

    ஆனால் அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பிரவீன் குமார் நேற்று சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கரை சந்தித்து ரூபாய் 55 லட்சம் மோசடி குறித்து புகார் செய்தார்.

    இதனை விசாரித்த சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார், சென்னையைச் சேர்ந்த தினேஷ் குமார், சேலத்தைச் சேர்ந்த சரவணன் மற்றும் சிவக்குமார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இவர்களைத் தவிர மேலும் இரண்டு பேரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மோசடி கும்பல் கொடுத்த கருப்புப் பெட்டியை நேற்று தனிப்படை போலீசார் சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு எடுத்துச் சென்று அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் முன்னிலையில் திறந்து பார்த்தனர்.

    அப்போது அந்த கருப்பு பெட்டிக்குள் முழுவதும் பஞ்சு வைத்து அதில் கெமிக்கல் கொட்டப்பட்டு இருந்தது. மற்றபடி இரிடியமோ அல்லது எந்த பொருளும் அதில் இல்லை. இந்த மோசடி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Cheating, Iridium

    அடுத்த செய்தி