உயிரைக் காப்பாற்ற உணவகத்தில் புகுந்த இளைஞர்... விடாமல் துரத்தி வெட்டிக்கொன்ற கும்பல்...!

விளையாட்டு போட்டித் தகராறு தொடர்பான வழக்கில் திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு சாட்சி சொல்ல வந்த போது மகேஷ் கொலை செய்யப்பட்டிருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

news18
Updated: August 17, 2019, 1:07 PM IST
உயிரைக் காப்பாற்ற உணவகத்தில் புகுந்த இளைஞர்... விடாமல் துரத்தி வெட்டிக்கொன்ற கும்பல்...!
ரத்த வெள்ளத்தில் சரிந்த இளைஞர் உயிரிழப்பு
news18
Updated: August 17, 2019, 1:07 PM IST
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உணவகத்திற்குள் புகுந்து இளைஞரை 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி முருகன் கோவில் அடிவாரத்தில் உள்ள நீதிமன்றம் வழியாக இளைஞர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென 4 பேர் கொண்ட கும்பல் விரட்டியதால் அவர் தப்பியோட முயன்றார்.

அங்குள்ள தனியார் உணவகத்திற்குள் புகுந்த இளைஞரை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. இதனைக் கண்ட வாடிக்கையாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன.


இதில், தலை மற்றும் கை, கால்களில் பலத்த காயமடைந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து இளைஞரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கொண்டு தப்பியோடிய கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த இளைஞர் வேப்பம்பட்டை சார்ந்த மகேஷ் என்பதும், கடந்த 2013 ஆம் ஆண்டு வாலிபால் விளையாட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.

விளையாட்டு போட்டித் தகராறு தொடர்பான வழக்கில் திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு சாட்சி சொல்ல வந்த போது மகேஷ் கொலை செய்யப்பட்டிருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Loading...

இதில், தலை மற்றும் கை, கால்களில் பலத்த காயமடைந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அந்த கும்பல் தப்பியோடியது.

தகவலறிந்து வந்த போலீசார் இளைஞரின் சடலத்தை கைப்பற்றினர்.  சிசிடிவி காட்சிகளை ஆய்வு நடத்தி வரும் போலீசார், கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Also see...

First published: August 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...