அக்‌ஷய பாத்திரம் தருவதாகக் கூறி ரூ.2 கோடி மோசடி... 8 பேர் கைது...!

அக்‌ஷய பாத்திரம் தருவதாகக் கூறி ரூ.2 கோடி மோசடி... 8 பேர் கைது...!
கைது செய்யப்பட்ட 8 பேர் மற்றும் கைப்பற்றப்பட்ட பணம்
  • News18
  • Last Updated: February 12, 2020, 1:08 PM IST
  • Share this:
திருப்பத்தூரை சேர்ந்த தொழிலதிபரிடம் அக்‌ஷய பாத்திரம் தருவதாக கூறி இரண்டு கோடி ரூபாய் மோசடி செய்த 8 பேர் கொண்ட கும்பல் சித்தூரில் பிடிபட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் குடிப்பள்ளி ரயில் நிலையம் அருகே சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரை கண்டதும், 2 கார், ஒரு பைக்கில் வந்தவர்கள் தப்ப முயன்றுள்ளனர். அவர்களை போலிசார் வளைத்து பிடித்து விசாரித்தபோது, அக்ஷய பாத்திர மோசடி வழக்கில் தேடப்பட்ட குற்றவாளிகள் என்பது தெரியவந்தது.

கடந்த ஆண்டு திருப்பத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் நவீனை அணுகிய இந்த கும்பல், தங்களிடம் அட்சய பாத்திரம் இருப்பதாகவும்,  இதன் மூலம் பூமிக்கு அடியில் இருக்கும் தங்க புதையலை கண்டுபிடித்து விடலாம் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.


இதனை நம்பி 2.10 கோடி ரூபாய் கொடுத்த நவீன், அந்த கும்பல் கொடுத்த அட்சய பாத்திரத்தை பயன்படுத்தி பார்த்தபோது, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்டார்.

நவீன் அளித்த புகாரின்பேரில் குடிப்பள்ளி போலீசார் தேடிக்கொண்டிருந்த நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த 4 பேர், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த இருவர், ஆந்திரா மாநிலம் சித்தூர் மற்றும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தலா ஒருவர் என 8 பேரும் வாகன சோதனையில் சிக்கி உள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொருவர் தேடப்பட்டு வருகிறார்.

கைது செய்யப்பட்ட மகாதேவா, குடிப்பள்ளி பகுதியில் தங்கியிருந்த ஹோட்டல் பின்புறத்தில், பிளாஸ்டிக் கவரில் போட்டு பூமி அடியில் புதைத்து வைத்திருந்த 75,40,000 ரூபாய் உட்பட 8 பேரிடமும் இருந்து மொத்தம் ஒரு கோடியே 29,35,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கார், இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.Also see...
First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்