ஆளைமாற்றி வேறொரு இளைஞரை வெட்டிக் கொலைசெய்த கும்பல்.. நடந்தது என்ன?
அரக்கோணம் அருகே பழிக்குப் பழியாக இளைஞரை கொலை செய்யச் சென்ற கும்பல், அவரது நண்பரை தீர்த்துக் கட்டியுள்ளது. பைக் இரவலால் அப்பாவி இளைஞர் கொலை கும்பலிடம் சிக்கியது எப்படி?

மாதிரிப்படம்
- News18 Tamil
- Last Updated: July 14, 2020, 7:34 AM IST
காஞ்சிபுரம் மாவட்டம் முட்டவாக்கத்தைச் சேர்ந்தவர் அஜித் குமார். இவர் ஞாயிற்றுக்கிழமை தனது நண்பர் விக்னேஷ் என்பவருடன் திருமால்பூர் அருகே மது அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது மாஸ்க் அணிந்து சென்ற 5 பேர் கொண்ட கும்பல் திடீரென அஜித்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது.
விக்னேஷ் தப்பி ஓட, ரத்த வெள்ளத்தில் சரிந்த அஜித் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சென்ற நெமிலி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அரக்கோணம் டிஎஸ்பி மனோகரன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். மேலும், சந்தேகத்தின் பேரில் 7 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் அதே கிராமத்தைச் சேர்ந்த சூர்யா.
சூர்யாவை கொலை செய்ய எதிர்தரப்பினர் நேரம் பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை மது அருந்தலாம் என சூர்யாவின் நண்பரான அஜித் குமார் நினைத்துள்ளார்.திருமால்பூர் அருகில் மது கிடைப்பதாக நண்பர் விக்னேஷ் கூறியுள்ளார். இதை அடுத்து சூர்யாவின் இருசக்கர வாகனத்தை இரவலாக வாங்கிக் கொண்டு இருவரும் சென்று மது பாட்டிலை வாங்கியுள்ளனர். பின்னர் அங்கேயே ஓரிடத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மது அருந்தி உள்ளனர்.
அப்போது திருமால்பூர் அருகே சூர்யாவின் இருசக்கரவாகனம் நிற்கும் தகவல் கொலை கும்பலுக்கு தெரிந்துள்ளது. இதை அடுத்து அங்கு சென்ற 5 பேர் கொண்ட கும்பல், பைக் அருகில் அமர்ந்திருந்த இருவரையும் சுற்றி வளைத்துள்ளது. விக்னேஷ் அங்கிருந்து தப்பிச் செல்ல, அஜித்தை சூர்யா என நினைத்த கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் படிக்க...
கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் வெற்றி கிடைத்திருப்பதாக அறிவித்த ரஷ்யா.. WHO சொல்வது என்ன?
மேலும் பாலுசெட்டி சத்திர கொலையில் அஜித் குமாருக்கு தொடர்பு ஏதும் இருந்ததா? அல்லது ஆள் மாறாட்டத்தில் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
அப்போது மாஸ்க் அணிந்து சென்ற 5 பேர் கொண்ட கும்பல் திடீரென அஜித்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது.
விக்னேஷ் தப்பி ஓட, ரத்த வெள்ளத்தில் சரிந்த அஜித் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சென்ற நெமிலி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.