திருந்திவாழ்ந்த பிரபல ரவுடியை அவரது தந்தையின் சமாதியிலே வைத்து கொடூரமாக வெட்டிய கும்பல்... காரணம் என்ன?

Youtube Video

செங்கல்பட்டு மாவட்டத்தில் திருந்திவாழ்ந்த பிரபல ரவுடியை அவரது தந்தையின் சமாதியிலே வைத்து கொடூரமாகவெட்டி கொன்று, தீயிட்டு எரித்து சென்றுள்ளது ஒரு கொலைகார கும்பல்.

  • Share this:


    செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம் கொண்டங்கி அடுத்த மேலயூர் கிராமத்தை சேர்ந்தவர் 40 வயதான சதீஷ்பாபு. இவர் மீது பல்லாவரம், வேளச்சேரி, திருப்போரூர் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலயூர் கிராமத்தில் உள்ள பூர்வீக வீட்டில் 2வது மனைவி லட்சுமி மற்றும் மகனுடன் சதிஷ்பாபு வசித்து வந்தார். கடந்த திங்கள் கிழமை இரவு அதே கிராமத்தில் உள்ள தனது தந்தையின் சமாதிக்கு நண்பர் ஒருவருடன் காரில் சென்றுள்ளார் சதிஷ்பாபு.

    அப்போது திடீரென சதீஷின் காரை ஒரு கும்பல் மறித்து காரில் இருந்த சதீஷை சரமாரியாக வெட்டிசாய்த்துள்ளது. தாக்குதலில், காரிலேயே ரத்தவெள்ளத்தில் சரிந்த சதீஷ்பாபு உயிரிழந்தார். சதீஷ்பாபு உயிரிழந்ததை உறுதி செய்த கும்பல், அவரது சடலத்தை காரில் இருந்து இறக்கி, தரையில் வீசியுள்ளது. சிறிது தூரம் சடலத்தை இழுத்துச்சென்ற கும்பல், சதீஷ்பாபுவின் தந்தையின் சமாதி அருகே சடலத்தை போட்டு தீயிட்டு கொளுத்தியுள்ளது.

    தொண்டரை தள்ளிவிட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்: இணையத்தில் வைரலாகும் வீடியோ

    அத்துடன் சதீஷ்பாபுவின் காரையும் அருகில் இருந்த வாய்க்காலில் கவிழ்த்துவிட்டு அக்கும்பல் தப்பியோடியுள்ளது. பாதி எரிந்த நிலையில், மயானத்தில் சடலம் இருப்பதாக தகவல் அறிந்த திருப்போரூர் போலீசார், சம்பவ இடத்துக்குச்சென்று தடயங்களை சேகரித்தனர்.

    முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ள போலீசார், நள்ளிரவில் சதீஷ் பாபுவை மயானத்திற்கு அழைத்துச் சென்றது யார்? அவரை வழிமறித்து கொலை செய்து எரித்தது யார்? என்ற கோணத்தில் விசாரணைந் நடத்தினர்.

    சதீஷ்பாபு ரவுடியாக இருந்த போது, அவர் செய்த குற்றங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் பழிதீர்ப்பதற்காக அவரை கொலை செய்தனரா? என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. சதீஷ்பாபு திருந்தி வாழ காவல்துறையிடம் கருணை மனுவழங்கியுள்ளதாகவும் அதனால் கடந்த ஒரு ஆண்டாக குற்றசம்பவங்களில் ஈடுபடவில்லை என்று கூறப்படுகிறது.

    திருந்தி வாழ்ந்த ரவுடியை ஒரு கும்பல் ரகசியமாக குறிவைத்து தீர்த்துக்கட்டியது திருப்போரூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

     






    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: