A ஃபார் ஆதாம்… B ஃபார் பைபிள்..! பாட புத்தகத்தில் மத அடையாளங்களை புகுத்திய தனியார் பள்ளி

news18
Updated: August 10, 2019, 3:38 PM IST
A ஃபார் ஆதாம்… B ஃபார் பைபிள்..! பாட புத்தகத்தில் மத அடையாளங்களை புகுத்திய தனியார் பள்ளி
கையேடு
news18
Updated: August 10, 2019, 3:38 PM IST
கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள  தனியார் ஆங்கிலப்பள்ளியில் குறிப்பிட்ட மதத்தின் அடையாளங்களை பதியவைக்கும் முயற்சியாக எ ஃபார் ஆதாம், பி ஃபார் பைபிள் என்று அச்சிடப்பட்ட புத்தகம் கொடுக்கப்பட்டிருப்பது சர்ச்சை எழுப்பியுள்ளது.

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் மேல் நிலைபள்ளி ஒன்று இயங்கி வருகிறது.  இங்கு படிக்கின்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கையேட்டில் ஏ ஃபார் ஆதாம், பி ஃபார் பைபிள், சி ஃபார் கிறிஸ்து, என்றும் ஐ ஃபார் இம்மானுவேல், ஜெ ஃபார் ஜீசஸ் என்று அந்த பட்டியல் நீள்கிறது.

ஏ ஃபார் ஆப்பிள், பி ஃபார் பால், சி ஃபார் கேட் என்ற அர்த்தமெல்லாம் மாற்றப்பட்டு ஏ ஃபார் ஆதாம், பி ஃபார் பைபிள், சி ஃபார் கிறிஸ்து, என்றும் ஐ ஃபார் இம்மானுவேல், ஜெ ஃபார் ஜீசஸ் என்று அந்த பட்டியல் காட்சியளிக்கிறது .


இதனை தினமும் மாணவர்கள் மனதில் பதியவைக்கும் வகையில் எழுத்து பயிற்சியும் கொடுத்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது.



அனைத்து மத குழந்தைகளும் படிக்கின்ற பள்ளியில் குறிபிட்ட மத அடையாளத்தை மாணவர்களின் மனதில் பதியவைக்கும் முயற்சிக்கு ஒரு சில பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இதனை பள்ளி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

Loading...

இந்த குற்றச்சாட்டு குறித்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை  என்பவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர் போனை எடுக்கவில்லை.

அரசின் அங்கீகாரம் பெற்ற எந்த ஒரு கல்வி நிறுவனமும், குறிப்பிட்ட மதம் மற்றும் சாதியை ஊக்கப்படுத்தும் செயல்களை ஒரு போதும் செய்யக்கூடாது என்ற விதி இருக்க அதனை மீறி மாணவர் கையேட்டில் குறிப்பிட்ட மதத்தை ஊக்கப்படுத்தும் வாசகங்களை பாடமாக அச்சடித்து கொடுப்பது விதியை மீறிய செயல். எனவே,  முதன்மை கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

First published: August 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...