Home /News /tamil-nadu /

சென்னை தி.நகரில் உள்ள பிரபல பர்னிச்சர் கடையில் தீவிபத்து

சென்னை தி.நகரில் உள்ள பிரபல பர்னிச்சர் கடையில் தீவிபத்து

சென்னை தியாகராய நகரில் உள்ள ஜெயசந்திரன் பர்னிச்சர் கடையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

    சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் ஜெயச்சந்திரன் நிறுவனத்திற்கு சொந்தமான பர்னிச்சர் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் காலை 11.45 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டு தி.நகர் அசோக் நகர் உள்ளிட்ட பகுதியில் இருந்து 3 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன.

    முதல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், கண்ணாடி பொருட்கள் வெடித்து சிதறி உள்ளது. பர்னிச்சர் பொருட்கள் எரிந்ததால் அந்த பகுதி சிறுது நேரம் புகை மண்டலமாக காட்சி அளித்ததுள்ளது. தி.நகர், அசோக்நகர், உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் வந்த தீயணைப்பு துறையினர், வாடிக்கையாளர்களைம், கடை ஊழியர்களையும் பத்திரமாக வெளியேற்றி தீயை ஒரு மணி நேரத்தில் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.

    முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. சில லட்சம் மதிப்பிலான பர்னிச்சர் பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளது. தீபாவளி பண்டிகையொட்டி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பொருட்கள் வாங்க ரங்கநாதன் தெருவுக்கு வந்திருந்த நிலையில் திடீர் தீ விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Chennai, Diwali

    அடுத்த செய்தி