கொரோனா விதிமீறல் - சென்னையில் ரூ.3.16 கோடி அபராதம் வசூல்
கொரோனா விதிமீறல் - சென்னையில் ரூ.3.16 கோடி அபராதம் வசூல்
மாதிரி படம்
தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்த விதிகள் கடுமையாக்காப்பட்டு உள்ளதாகவும், இனி வரும் காலங்களில் தவறாமல் பின்பற்ற வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதுகாப்பு விதிகளை முறையாக கடைபிடிக்காத நிறுவனங்கள் மற்றும் தனி நபரிடம் இருந்து 3 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. கொரோனா நோய் பரவலைத் தடுக்க முகக் கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட பல பாதுகாப்பு விதிகளை பின்பற்ற அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில், இந்த பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்றாத வணிக வளாகங்கள், கடைகள், தனி நபர்களிடம் இருந்து இதுவரை 3 கோடியே 16 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்த விதிகள் கடுமையாக்காப்பட்டு உள்ளதாகவும், இனி வரும் காலங்களில் தவறாமல் பின்பற்ற வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.