கொரோனா தடுப்பு விதிமுறைகள்: அரசின் உத்தரவை பின்பற்றாதவர்களிடம் இருந்து ஒரே வாரத்தில் ரூ.44 லட்சம் அபராதம் வசூல்..
கொரோனா தடுப்பு விதிமுறைகள்: அரசின் உத்தரவை பின்பற்றாதவர்களிடம் இருந்து ஒரே வாரத்தில் ரூ.44 லட்சம் அபராதம் வசூல்..
கோப்புப் படம்
கடந்த ஒரு வாரத்தில் 20,000-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து ரூ.44 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாதவர்கள், தனிமனித இடைவெளி பின்பற்றாதவர்களிடம் இருந்து ஒரே வாரத்தில் ரூபாய் 44 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 -இன் படி அவசரச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு, அதன் படி தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு எதிராக ஊரடங்கு உத்தரவை மீறியதாகவும், முகக்கவசம், தனி மனித இடைவெளி பின் பற்றாதவர்கள் மீது அபராதம் விதிப்பதற்கான சட்டம் திருத்தம் கொண்டு வரப்படுத்தப்பட்டது.
அதன் படி தமிழகம் முழுவதும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்கள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக கடை பிடிக்காதவர்கள் கைகளை சுத்தம் செய்வதற்கான கிருமி நாசினி வைக்காமல் இருக்கும் நிறுவனம் ஆகியவை என அதற்கு தகுந்தார் போல் ரூ.200 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிப்பதற்கான விதிமுறைகள் கொண்டுவரப்பட்டது.
இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் கடந்த ஒரு வாரத்தில் 20,000-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து ரூ.44 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.