ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மணல் கடத்தலை தட்டிக்கேட்ட விவசாயிக்கு அரிவாளால் வெட்டு!

மணல் கடத்தலை தட்டிக்கேட்ட விவசாயிக்கு அரிவாளால் வெட்டு!

விவசாயி முருகேசன்

விவசாயி முருகேசன்

உடனடியாக மணல் கடத்தலை தடுத்து நிறுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமுக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மணல் கடத்தலை தட்டிக்கேட்ட விவசாயியை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  சம்புவராயநல்லூர் கிராமம் அருகே கமண்டல நாகநதி ஆற்றில் தச்சராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சேட்டு சிவா என்பவர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

  இந்நிலையில், மணல் கடத்திச் சென்ற டிராக்டர்களை வழிமடக்கி விவசாயி முருகேசன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சேட்டு சிவா சிலருடன் சென்று முருகேசனை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

  ரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட முருகேசன் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

  உள்ளூர் மக்களின் துணையுடன் இந்தப் பகுதியில் தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்தபோது மண் சரிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், தற்போது மணல் கடத்தலை தட்டிக்கேட்ட நபரை மணல் மாஃபியாக்கள் அரிவாளால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  உடனடியாக மணல் கடத்தலை தடுத்து நிறுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Sand mafia, Thiruvannamalai