உயிரிழந்த தன் காளையின் நினைவாய் முழு உருவச்சிலை வைத்த விவசாயி

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே பாப்பம்பாளையம் எனும் கிராமத்தில் விவசாயி ஒருவர் இறந்து போன தன் காளையின் நினைவாக அதே போன்ற ஒரு காளை உருவச் சிலையைக் கட்டியுள்ளார்.

உயிரிழந்த தன் காளையின் நினைவாய் முழு உருவச்சிலை வைத்த விவசாயி
உயிரிழந்த காளைக்கு முழு உருவச் சிலை
  • Share this:
மனிதர்கள் நாடோடியாய்த் திரிந்து ஓரிடத்தில் தங்கள் குடியிருப்பை அமைக்கத் தொடங்கிய நாள் முதலே கால்நடைகளை தங்களது செல்லப் பிராணிகளாக வளர்க்கத் தொடங்கிவிட்டனர். தங்களின் தேவைகளுக்கு அவற்றைப் பயன்படுத்திக் கொள்வது என்பதைத் தாண்டி, தங்கள் குடும்பத்தில் ஒருவர் என்ற ரீதியில் பலரும் உணர்வுபூர்வமாக தங்கள் செல்லப்பிராணியை வளர்த்து வருகின்றனர்.

Also read: வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட காவலரின் குடும்பத்திற்கு ₹ 86.5 லட்சம் நிதி வழங்கிய சக காவலர்கள்

தங்கள் செல்லப்பிராணி நோய்வாய்ப்பட்டால் பலரும் துடிதுடித்துப் போய் மருத்துவமனைகள் பலவற்றில் ஏறி இறங்குவதை நாம் பார்த்திருப்போம். அது போலவே, உயிரிழந்த செல்லப்பிராணியின் நினைவாக அதன் உரிமையாளரும் குடும்பத்தினரும் பல நாட்கள் சோகத்தில் ஆழ்ந்திருப்பதையும் நாம் கண்டிருப்போம். இவற்றையெல்லாம் விஞ்சும் அளவுக்கு திருப்பூரில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.


திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே பாப்பம்பாளையம் எனும் கிராமத்தில் செல்லமுத்து எனும் விவசாயி தனது தோட்டத்தில் ஆசை ஆசையாக வளர்த்து வந்த காராம் பசு காளை கடந்த 2018ம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தது. இதையடுத்து, காளையின் உடலை அவரது தோட்டத்திலேயே அடக்கம் செய்துள்ளனர்.எனினும், பாசமாக வளர்த்து வந்த காளை எதிர்பாராத விதமாக உயிரிழந்ததை ஏற்க முடியாமல் இத்தனை நாட்களாய் தவித்த செல்லமுத்து, காளையின் நினைவாக அதன் உடலை அடக்கம் செய்த இடத்திலேயே அதற்கு முழு உருவச் சிலையைக் கட்டி முடித்திருக்கிறார்.

உயிரிழந்த தன் காளைக்கு முழு உருவச் சிலை வைத்த விவசாயி.
இதன் மூலம் காளை அந்த இடத்தில் இருப்பது போன்ற உணர்வு தனக்கு ஏற்படுவதாக அவர் கூறுகிறார். முழுவதுமாகக் கட்டி முடிக்கப்பட்ட காராம் பசு காளையின் உருவச் சிலை தற்போது திறக்கப்பட்டுள்ளது. 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்தச் சிலையை ஊர் பொதுமக்களும் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.
First published: August 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading