Home /News /tamil-nadu /

தமிழக - புதுச்சேரி எல்லையில் அசைவ பிரியர்களின் மணம் இழுக்கும் 5 ரூபாய் பரோட்டா கடை!

தமிழக - புதுச்சேரி எல்லையில் அசைவ பிரியர்களின் மணம் இழுக்கும் 5 ரூபாய் பரோட்டா கடை!

Youtube Video

5 Rupees Parotta | தமிழக - புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ள 5 ரூபாய் பரோட்டா கடை, வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது...

    கலப்படம் இல்லா மசாலா பொருட்களுடன் தயாரிக்கப்படும் குழம்புகளின் மணம், தங்களை கவர்ந்து இழுப்பதாக அசைவ பிரியர்கள் கூறுகின்றனர்... கிழக்கு கடற்கரை சாலையில் தமிழக -  புதுச்சேரி எல்லையில் உள்ள கோட்டக்குப்பம் பிரியாணி, பரோட்டா, சிக்கன், ஆட்டுக் கால் சூப் என மசாலா மணம் கமழும் பகுதியாக திகழ்கிறது.  இதையும் தாண்டி ஒரு சிறப்பு இருக்கிறது.

    அதுதான் 5 ரூபாய் பரோட்டா கடை.. 80 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு இருந்த ஒரே பரோட்டா கடை இது தான். கவி பக்கிரி மைதீன் என்பவர் நடத்திய கடைக்கு, நியூ கவி ஓட்டல் என பெயர் இருந்தாலும் 5 ரூபாய் பரோட்டா கடை தான் இதன் அடையாளம். ஏசி கிடையாது, மிளிரும் சேர். டேபிள் கிடையாது. மரத்தினால் ஆன டேபிள்கள் மட்டுமே உள்ளன. காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை பரோட்டோ போட்டு கொண்டே இருக்கிறார்கள்.. ஒரு பக்கம் சால்னா கொதித்து கொண்டே இருக்கிறது. அனைத்தும் விறகு அடுப்பில் தான் சமைக்கப்படுகின்றன.

    ஒரு ரூபாய்க்கு விற்ற பரோட்டா 15 ஆண்டுகளுக்கு முன் 5 ரூபாயானது. இதையடுத்து விலை ஏற்றப்படவில்லை என்ற போதும், தரமும், அளவும் குறைக்கப்படவில்லை என்று கூறுகிறார் கடையின் உரிமையாளர் ஷரீஃப்... மாறாத சுவை, மணம் காரணமாக தங்கள் கடையை பல ஊர் மக்களும் தேடி வருவதாக கூறுகிறார் சால்னா மாஸ்டர் முகமது அலி. இவர், 8 வயதில் இருந்து இந்த கடையில் பணியாற்றுவதாக பெருமிதம் தெரிவிக்கிறார்.

    Read More : FASTAG ஸ்கேனிங் மூலம் பணம் திருடப்படுவதாக பரவும் வீடியோ - உண்மை என்ன


    விதவிதமான பரோட்டா மற்றும் சிக்கன், மட்டன் குழம்புகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இதனால், புதுச்சேரி வந்து செல்லும் அசைவ பிரியர்கள் 5 ரூபாய் பரோட்ட கடையில் ஒரு பிடி பிடித்துவிட்டு தான் செல்கின்றனர். சுவையூட்டி மற்றும் நிறமூட்டி கிடையாது.. சொந்த தயாரிப்பு மசாலா... 16 மணி நேர உழைப்பு  என தமிழக - புதுச்சேரி எல்லையில் எந்த விளம்பரமும் இன்றி வாடிக்கையாளரை சுண்டி இழுத்து வருகிறது 5 ரூபாய் பரோட்டா கடை...
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Puducherry, Tamilnadu, Viral

    அடுத்த செய்தி