• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சிவகங்கையில் குடிபோதையில் தாயை அடித்துக் கொன்ற மகன் கைது

சிவகங்கையில் குடிபோதையில் தாயை அடித்துக் கொன்ற மகன் கைது

குடிபோதை

குடிபோதை

மானாமதுரை அருகே குடிபோதையில் தாயை அடித்துக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • Share this:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வேலூர் கிராமத்தில் தாயை கொலை செய்த மகனை மானாமதுரை சிப்காட் போலீசார் கைது செய்துள்ளனர்.

மானாமதுரை அருகே வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹோட்டல் தொழிலாளி ஜெயச்சந்திரன். போதைக்கு அடிமையான ஜெயச்சந்திரன் இரவு 10 மணியளவில் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து குடிபோதையில், தாய் முனியாயியிடம் சண்டையிட்டு கம்பு கல்லால் தாக்கி கொடூரமாக தாக்கிக் கொலை செய்தார்.

இதனை அறிந்த உறவினர்கள் மானாமதுரை சிப்காட் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முனியாயியை மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் முனியாயியை அடித்துக் கொலை செய்த மகன் ஜெயச்சந்திரனை, கைது செய்து மானாமதுரை சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Also see:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: