Home /News /tamil-nadu /

மதுபோதையில் அரசுப் பேருந்து ஓட்டுனரை தாக்கிய இளைஞர்கள்.. பேருந்து கண்ணாடியை உடைத்து அட்டகாசம்

மதுபோதையில் அரசுப் பேருந்து ஓட்டுனரை தாக்கிய இளைஞர்கள்.. பேருந்து கண்ணாடியை உடைத்து அட்டகாசம்

அரசுப் பேருந்து கண்ணாடியை சேதப்படுத்தி இளைஞர்கள்

அரசுப் பேருந்து கண்ணாடியை சேதப்படுத்தி இளைஞர்கள்

Mayiladuthuurai | சித்தமல்லி அடுத்த பட்டவர்த்தி பகுதி இளைஞர்கள் பட்டப்பகலிலேயே மது போதையில் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

  • News18
  • Last Updated :
    மயிலாடுதுறை அருகே மதுபோதையில் அரசு பேருந்தை வழிமறித்த இளைஞர்கள் ஓட்டுநரிடம் வம்பிழுத்து அவரை அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சித்தமல்லி அடுத்த பட்டவர்த்தி பகுதி இளைஞர்கள் பட்டப்பகலிலேயே மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த வழியாக செல்லும் அரசு பேருந்தில் பயணிகள் மீது பாட்டில் தண்ணீரை ஊற்றுவது, போக்குவரத்துக்கு இடையூறு செய்வது போன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது சித்தமல்லியிலிருந்து பட்டவர்த்தி நோக்கி வந்த அரசு பேருந்துக்கு வழிவிடாமல் அந்த இளைஞர்கள் சாலையின் குறுக்கே இரு சக்கர வாகனத்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது . பேருந்து ஓட்டுநர் குமரேசன் கீழே இறங்கி ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை செல்போனில் வீடியோ எடுக்க முயன்ற போது ஓட்டுநரை இழுத்துப் போட்டு சரமாரியாக அடித்துள்ளனர்.

    Also read... காதல் விவகாரத்தில் பெற்ற மகளை பீர்பாட்டிலால் குத்திய தந்தை கைது

    மேலும் அரசு பேருந்து கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தினர். இதில் காயமடைந்த ஓட்டுநர் குமரேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அறிந்த மணல்மேடு போலீசார் அரசுப்பேருந்தை மணல்மேடு காவல்நிலையம் எடுத்து சென்றனர். வழக்குப்பதிவு செய்து ஓட்டுநரை தாக்கிவிட்டு பேருந்தை சேதப்படுத்திய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    -செய்தியாளர்: கிருஷ்ணகுமார்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Crime News, Mayiladuthurai, Tamil Nadu, Tamil News, Youths

    அடுத்த செய்தி