சொத்துத் தகராறில் தம்பியை சுட்டுக் கொன்ற பில்லா ஜெகன் உட்பட 8 பேர் கைது!

பில்லா ஜெகன்

உடலை மீட்டு விசாரணை நடத்திய போலீசார், தப்பியோடிய ஜெகனை தேடி வந்தனர். இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் பதுங்கியிருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  துத்துக்குடியில் சொத்துத் தகராறில் உடன் பிறந்த சகோதரரை கொலை செய்த பில்லா ஜெகன் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

  தூத்துக்குடி மட்டக்கடை பகுதியைச் சேர்ந்த பில்லா ஜெகன், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளராகவும், மாவட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவராகவும் உள்ளார்.

  சொத்து பிரிப்பது தொடர்பாக இவருக்கும், அவரது சகோதரர் சிமன்சன் என்பவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டபோது, பில்லா ஜெகன் துப்பாக்கியால் தனது சகோதரரை சுட்டுக் கொன்றார்.

  Also read... சொத்து தகராறில் தம்பியை சுட்டுக் கொலை - திமுக பிரமுகருக்கு போலீசார் வலைவீச்சு

  இதையடுத்து உடலை மீட்டு விசாரணை நடத்திய போலீசார், தப்பியோடிய ஜெகனை தேடி வந்தனர். இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் பதுங்கியிருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

  அவருடன் தங்கியிருந்த மேலும் 7 பேரையும் போலீசார் கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published: