Home /News /tamil-nadu /

உஷார்... இளம்பெண்களை வைத்து வெளிநாட்டில் இருந்து தமிழகத்தில் வலைவிரிக்கும் க்ரிப்டோகரன்சி மோசடி கும்பல்

உஷார்... இளம்பெண்களை வைத்து வெளிநாட்டில் இருந்து தமிழகத்தில் வலைவிரிக்கும் க்ரிப்டோகரன்சி மோசடி கும்பல்

கிரிப்டோகரன்சி

கிரிப்டோகரன்சி

இணையதளத்தில் இந்திய பணத்தை பிட்காயின்களாக முதலீடு செய்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் கோடிஸ்வரராக மாறிவிடலாம் என்று மோசடி செய்துள்ளனர்.

    ஏ.டி.எம் கார்டு மேல் இருக்கும் 16 நம்பர் கேட்டு மோசடி செய்வது, மொபைலுக்கு வரும் ஓ.டி பி எண்ணை கேட்டு மோசடி செய்வது, இணையத்தில் லிங்கை கிளிக் பண்ணுங்க எனக்கூறி மோசடி செய்வது, வங்கி மேலாளர்கள் போல பேசி பணத்தை மோசடி செய்வது என பல்வேறு மோசடி வகைகளை நாம் அறிந்துள்ள நிலையில் தற்போது புதிதாக கிரிப்டோகரன்சி மோசடியும் அரங்கேற துவங்கியுள்ளது.

    "சில லட்சங்களை முதலீடு செய்யுங்கள், கோடிகளில் லாபம் ஈட்ட முடியும்" என்ற கிரிப்டோகரன்சியின் விளம்பரம் சமீபகாலமாக உலகம் முழுவதும் பிரபலமாக மாறிக் கொண்டே வருவதும் பலர் கிரிப்டோகரன்சியை நம்பி அதில் முதலீடு செய்து வருவதும் அதிகரித்து வருகிறது. கிரிப்டோகரன்சியை பலநாடுகள் தடை செய்திருந்தாலும் சில நாடுகளில் புழக்கத்தில் இருந்து வருகிறது.
    இந்த நிலையில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை மோசடி செய்யும் கும்பல்களை போல, கிரிப்டோகரன்சியிலும் மோசடி கும்பல் தங்கள் மோசடி வலையை விரித்து வருகின்றனர்.

    பொதுவாக வங்கி பண பரிவர்த்தனை மோசடி ஒவ்வொரு நாட்டுக்குள்ளாகவே பெரும்பாலும் நடந்திருந்த நிலையில் கிரிப்டோகரன்சி மோசடி கும்பல் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தனிநபரை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    அப்படி ஒரு சம்பவம் தான் சென்னையில் நடந்தேறியுள்ளது.
    சென்னையில் பணியாற்றும் ஐ.டி ஊழியர் ஒருவர் டிண்டர் டேட்டிங்(Tinder - dating app) ஆப்பில் தனது சுய விவரக் குறிப்புகள் பதிவேற்றி உள்ளார். இதனையடுத்து சீனாவிலிருந்து பேசுவதாக இளம்பெண் ஒருவர் ஐடி ஊழியரிடம் நட்பாக பேச ஆரம்பித்துள்ளார். நட்பின் மூலம் நெருக்கமான இருவரும் தங்களின் மொபைல் எண்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். இதனால் இருவரும் வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்து வந்துள்ளனர்.

    இதையும் படிக்க : அருள்வாக்கு, ஆசிர்வாதம்... சர்ச்சை பெண் சாமியாரின் வைரல் வீடியோ... யார் இந்த அன்னபூரணி?

    சீனாவில் இருந்து பேசுவதாக கூறிய அந்த இளம்பெண், தான் உங்களை காதலிப்பதாக கூறியுள்ளார். மேலும் தான் சொல்லும் இணையதளத்தில் இந்திய பணத்தை பிட்காயின்களாக முதலீடு செய்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் கோடிஸ்வரராக மாறிவிடலாம் எனவும் அதன்பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். Binance என்ற இணையதளம் மூலமாக இந்திய பணத்தைக்கொடுத்து அதனை பிட்காயின்களாக மாற்றி, பின் அந்த பிட்காயின் டிஜிட்டல் பரிவர்த்தணையை Meta trading 4, Meta trading 5 என்ற trading ஆப்பின் மூலமாக முதலீடு செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் தற்போது கிடைக்கும் லாபத்தை 15 நாட்கள் கழித்தே எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

    முதலில் ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் ரூபாய்களை பிட்காயின்களாக மாற்றி முதலீடு செய்தபோது லாபம் கிடைத்துள்ளது. இதனால் சந்தோஷம் அடைந்த ஐ.டி ஊழியர் கடந்த ஆகஸ்டு மாதம் ரூ.4.5 லட்சம் பணத்தை மொத்தமாக பிட்காயின்களாக மாற்றி Meta trading 4, Meta trading 5 என்ற trading இணையதளங்களில் முதலீடு செய்துள்ளார். ஆனால் முதலீடு செய்த சில நிமிடங்களில் அந்த முதலீடு செய்யப்பட்ட பிட்காயின்கள் மாயமாகியுள்ளது. இது பற்றி அந்த இளம்பெண்ணிடம் கேட்டதற்கு அனுப்பிய பணம் வேறோரு டிஜிட்டல் கரன்சியில் முதலீடு செய்ததாகவும் சில நாட்கள் கழித்தே லாபம் வரும் எனகூறியுள்ளார்.

    இதையும் படிங்க : மதுரையில் பிறந்து 6 நாட்களே ஆன பெண் சிசு படுகொலை? போலீசார் தீவிர விசாரணை

    அதன் பின்பு அந்த இளம்பெண் ஐ.டி ஊழியருடன் பேசுவதையும் தவிர்த்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஐ.டி ஊழியர் கோபமடைந்து இளம்பெண்ணிடம் கேட்க தன்னை மலேசியன் போலீஸ் கைது செய்து விட்டதாகவும் உன்னை போலவே நானும் மற்றொரு நபரை நம்பி ஏமாற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த ஐ.டி ஊழியர் பண முதலீடு செய்த இணையதளம் சென்று பார்த்தபோது அவை அனைத்தும் போலியானது என தெரியவந்தது.  மேலும் இளம்பெண் பேசிய வாட்ஸ் அப் எண்ணும் போலீயானது என தெரியவந்துள்ளது.

    பாதிக்கப்பட்ட ஐ.டி ஊழியர் இந்த சம்பவம் குறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

     
    Published by:Vijay R
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Cryptocurrency

    அடுத்த செய்தி