தோனி உட்பட 14 சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு கொரோனா நெகட்டிவ்...

கோப்புப்படம்

தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவுடன் ஆகஸ்ட் 14-ஆம் தேதி தனி விமானம் மூலம் தோனி உள்ளிட்ட 7 வீரர்கள் சென்னை வரவழைக்கப்பட்டனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி உட்பட 14 வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனோ பரிசோதனை முடிவு நெகட்டிவ் வந்துள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக தெரிவித்துள்ளார்.

  நடப்பாண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 19 ம் தேதி துபாயில் தொடங்குகிறது. கொரோனோ வைரஸ் பரவல் அச்சம் காரணமாக வீரர்களுக்கு இரண்டு முறை கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நெகட்டிவ் வரும் வீரர்கள் மட்டுமே துபாய் வருவதற்கு அனுமதி என நிர்வாக தரப்பில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது.

  இதன் அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு முதல் பரிசோதனை கடந்த 12-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது.
  கேப்டன் தோனிக்கு ராஞ்சியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று பரிசோதனை செய்யப்பட்டது.

  இதில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவுடன் ஆகஸ்ட் 14-ஆம் தேதி தனி விமானம் மூலம் தோனி உள்ளிட்ட 7 வீரர்கள் சென்னை வரவழைக்கப்பட்டனர்.

  துபாய் செல்வதற்கு முன் ஐந்து நாட்கள் பயிற்சி முகாமில் சென்னை சூப்பர் கிங்ஸ் இந்திய வீரர்கள் சேப்பாக்கத்தில் பயிற்சி மேற்கொண்டனர்.

  Also read... புதுச்சேரி: கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ள தனியார் மருத்துவக்கல்லூரி..

  இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை தோனி உள்ளிட்ட சி.எஸ்.கே வீரர்கள், அணி நிர்வாகிகள், ஊழியர்கள் என சுமார் 60 நபர்களுக்கு இரண்டாவது முறையாக கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  கொரோனோ பரிசோதனை மேற்கொண்ட அனைவருக்கும் நெகட்டிவ் என வந்துள்ளதாகவும், அனைவரும் நாளை நண்பகல் 1.30 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து துபாய் புறப்படுகின்றனர் எனவும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி நமக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

  துபாய் சென்றவுடன் உயிரியல் பாதுகாப்பு விதிமுறை அடிப்படையில் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தவுள்ளனர். பிறகு வழக்கம் போல் வீரர்கள் பயிற்சியை தொடங்கவுள்ளனர்.
  Published by:Vinothini Aandisamy
  First published: