ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை உடனடியாக தொடங்கவும் - திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை உடனடியாக தொடங்கவும் - திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

 திமுக அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்

திமுக அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்

 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பாஜகவினர் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள் என்றும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை உடனடியாக தொடங்கும்படி திமுக அனைத்து அணிகளின் நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில், திமுக அணிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், இளைஞர் அணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணி உள்ளிட்ட 23 அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இவர்கள் தவிர, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி ஆர் பாலு, முதன்மை செயலாளர் கே என் நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் என 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் திமுகவில் உள்ள அணிகளின் செயல்பாட்டை கண்காணிக்கும் விதமாக ஐ.பெரியசாமி, கனிமொழி , பொன்முடி, ஆ ராசா உள்ளிட்டோர் ஒவ்வொரு அணிக்கும் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அனைத்து அணிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பாஜகவினர் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள் என்றும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை இப்போது தொடங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

First published:

Tags: DMK, MK Stalin