மெட்ரோவில் வேலை என்று இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்த மர்ம கும்பல்!

சென்னை மெட்ரோவில் வேலை உறுதியாகிவிட்டது என்ற நம்பிக்கையில், நிஜாம் மொய்தீனும், மொத்தம் ஒரு 1,37,000 ரூபாயை, அந்த மோசடி கும்பலுக்கு அனுப்பியுள்ளார்.

news18
Updated: February 13, 2019, 4:55 PM IST
மெட்ரோவில் வேலை என்று இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்த மர்ம கும்பல்!
கோப்புப்படம்
news18
Updated: February 13, 2019, 4:55 PM IST
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை எனக்கூறி, இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்த மர்ம கும்பல் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் நிஜாம் மொய்தீன் என்பவருக்கு மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை என குறுஞ்செய்தி வந்துள்ளது.

உடனடியாக அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது, cmrlmetro22@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகைப்படங்கள், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் ஆதார் விவரங்களை அனுப்புமாறு கூறப்பட்டுள்ளது.

உடனடியாக நிஜாம் மொய்தீன், தன்னுடைய விவரங்கள் மற்றும் தனது தம்பி சதாம் உசேனின் விவரங்களையும் அனுப்பியுள்ளார்.

அதன்பின்னர் டெல்லியில் இருந்து பேசுவதாக குமரேசன் என்பவர் நிஜாம் மொய்தீனை தொடர்பு கொண்டுள்ளார்.  இருவருக்கும் 28,700 ரூபாய் மாதச் சம்பளத்துக்கு வேலை உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், 15 நாள் பயிற்சிக்காக தலா நான்காயிரத்து ஐநூறு ரூபாயை அனுப்புமாறும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த சில நாட்களில் இருவருக்குமான பணி நியமன ஆணைகள் கூரியர் மூலம் வந்தடைந்தது.  வேலை கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த நிஜாம் மொய்தீனை மீண்டும் தொடர்பு கொண்ட அந்த நபர், சீருடை,செல்போன்,லேப்டாப்களுக்கு, தலா 26,500 ரூபாய் செலுத்த வேண்டும் என கூறியிருக்கிறார்.

இதேபோல், மெட்ரோ ரயில் இன்சூரன்ஸ் பிரிவில் இருந்து பேசுவதாக கூறிய நபர், 37 ஆயிரம் ரூபாயை காப்பீட்டுத் தொகையாக செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

சென்னை மெட்ரோவில் வேலை உறுதியாகிவிட்டது என்ற நம்பிக்கையில், நிஜாம் மொய்தீனும், மொத்தம் ஒரு 1,37,000 ரூபாயை, அந்த மோசடி கும்பலுக்கு அனுப்பியுள்ளார்.

இதனைதொடர்ந்து, மெட்ரோ தலைமைச் செயல் அதிகாரி என்ற போர்வையில் பேசிய நபர், 4 லட்ச ரூபாய் கமிஷனாக தர வேண்டுமென கேட்டுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த நிஜாம் மொய்தீன், கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரித்துள்ளார். அப்போது தான், போலி பணி நியமன ஆணைகள் தமக்கு அனுப்பப்பட்டு, தாம் மோசடியில் சிக்கியிருந்தது அவருக்கு தெரியவந்தது. இதனையடுத்து, மொய்தீன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று புகாரளித்தார்.

Also see...

First published: February 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...