• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Exclusive | விவசாயிகளுக்கு உர மானியம் வழங்காமல் முறைகேடு?

Exclusive | விவசாயிகளுக்கு உர மானியம் வழங்காமல் முறைகேடு?

Youtube Video

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  • Share this:
    ஆரணி சுற்றுவட்டாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிகளவில் நெல் பயிரிடப்பட்டு வருகிறது. விவசாயிகள் வயல்களுக்கு தேவையான டி.ஏ.பி, காம்பளக்ஸ், யூரியா, பொட்டாஷ் போன்ற உரங்களை ஆரணியில் உள்ள கடைகளில் வாங்கி செல்கின்றனர்.

    விவசாயிகள் உரம் வாங்குவதற்கு வேளாண்மை துறை சார்பில் 10 விழுக்காடு மானியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது உரக்கடைகளில் விவசாயிகளுக்கு மானியம் வழங்காமல் முழு தொகையும் வசூலிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், ஆதார் அட்டை மூலம் இரண்டு உர மூட்டைகளே வாங்கினாலும், 10 மூட்டைகள் வாங்கியதாக தொலைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    பெரும்பாலான விவசாயிகள் செல்போனுக்கு வரும் குறுஞ்செய்தியை கண்டுகொள்ளாத நிலையில், மானியத் தொகை வராதது குறித்து கேள்வி எழுப்பும் விவசாயிகளுக்கு உரக்கடை உரிமையாளர்கள் சரிவர பதிலளிப்பதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

    மேலும் படிக்க... திமுக - காங்கிரஸ் முதல் வெற்றியின் கதை

    உர மானியம் வழங்குவதில் முறைகேடு குறித்து வேளாண்மை துறை அதிகாரிகளும் சரிவர பதிலளிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், அரசின் மானியம் பெற முடியாமல் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.




    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: