மூன்று சகோதரிகளுக்கும் ஒரே ஸ்மார்ட்போன்: ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்வதில் சிரமம்: மனவேதனையில் தற்கொலை செய்துகொண்ட மாணவி

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஒரே செல்போனில் ஆன்லைன் பாடம் கற்க 3 சகோதரிகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • News18
  • Last Updated: August 31, 2020, 6:52 PM IST
  • Share this:
கள்ளக்குறிச்சி மாவட்டம் மேட்டுநன்னாவரம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்ற விவசாயியின் மகள்களான நித்யஸ்ரீ உட்பட 3 பேர் அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரியில் பயின்று வந்தனர். ஊரடங்கு காரணமாக தற்போது ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுவதால், ஆறுமுகம் ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்துள்ளார்.

ஒரு செல்போனில் மூன்று பேரும் பாடங்களை கவனிக்க அவர் அறிவுறுத்தி உள்ளார். இந்த நிலையில் 3 பேருக்கும் ஒரே நேரத்தில் பாடங்கள் நடத்தப்படுவதால் இவர்களிடையே ஆன்லைன் வகுப்பை கவனிக்க சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


Also read... குப்பை கொட்டியதில் முன்விரோதம் - தந்தை கொலைக்கு 3 ஆண்டுகளுக்கு பின் பழித்தீர்த்த மகன்கள்இதனால் மூத்த மகள் நித்யஸ்ரீ தனக்கு வேறொரு போன் வாங்கி தருமாறு தனது தந்தையிடம் கேட்டு உள்ளார். எனினும் பணம் இல்லாததால் தற்போது வாங்கி தர இயலாது எனவும் பிறகு வாங்கி தருவதாகவும் ஆறுமுகம் கூறியதாக தெரிகிறது.

இதன் காரணமாக நித்யஸ்ரீ வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டுள்ளார். இதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
First published: August 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading