களி மண்ணால் நடிகர் ரஜினிக்கு சிலை வடித்த மண்பாண்ட கலைஞர். பிரமித்து ஆடியோ மெசேஜ் அனுப்பி நடிகர் ரஜினி.காந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பூளவாடி பகுதியை சேர்ந்தவர் ரஜினி ரஞ்சித். இவர் மண்பாண்டம் செய்யும் தொழில் செய்து வருகிறார். 21 வயதான இவர் குழந்தை பருவத்திலிருந்தே ரஜினியின் தீவிர ரசிகராய் இருந்து வந்து உள்ளார்.
தனது ஊரில் ரஜினி ரசிகர் மன்றத்தார் நடத்தும் நிகழ்ச்சிகளில் ரஜினி போல் வேடமிட்டு ஆடியும் பாடியும் வந்துள்ளார். இதனால் தனக்கு மிகுந்த மன நிறைவு ஏற்படுவதாக தெரிவித்தார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் படம் வரைவதிலும் ஈடுபாடு கொண்ட அவர் ரஜினியின் படங்களையும் வரைந்து தனது வீடு மற்றும் வேலை செய்யும் இடங்களில் மாட்டி வைத்துள்ளார்.
இவர் ரஜினியின் படத்தை அடிக்கடி வரைந்ததன் மூலம் ரஜினியின் முக அமைப்பை தனது மனதிற்குள் நன்றாக பதிவு செய்து வைத்து கொண்டார். எந்த ஒரு படத்தையும் பார்க்காமல் ரஜினி முகத்தை வரையும் அளவிற்கு தேர்ச்சி பெற்றவர். பின்னர் ஒரு நாள் மண்பாண்டம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது ரஜினி உருவத்தை சிலையாக வடிக்க முயற்சி மேற்கொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகினார் கமல்ஹாசன்! காரணம் இதுதானாம்...
சில மணி நேர முயற்சியில் ரஜினியின் உருவத்தை சிலையாக வடித்த போது தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான தருணமாக அது அமைந்ததாக தெரிவித்தார். இதன் பிறகு மண்பாண்டம் செய்யும் போதெல்லாம் களி மண்ணில் ரஜினியின் சிலையை குறுகிய நேரத்தில் வடிவமைத்து வந்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தான் வடித்த ரஜினி சிலையோடு சென்னை விரைந்த ரஜினி ரஞ்சித். நீண்ட போராட்டத்திற்க்கு பின்பு ரஜினியை சந்தித்து தான் வடித்த சிலையை தந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது களிமன்னில் தான் வடித்த ரஜினி சிலையை டிவிட்டர் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் பதிவிட அதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து பதிவிட விஷயம் ரஜினி கவனத்திற்கு சென்றுள்ளது.
சிலையின் கைவண்ணத்தையும் ரசிகனான ரஜினி ரஞ்சித்தின் தீவிர பற்றையும் உணர்ந்த ரஜினி அவரை பாராட்டி ஆடியோ ஒன்றை உதவியாளர் மூலம் அனுப்பியுள்ளார். அதில் வணக்கம் ரஞ்சித், நீங்க செய்த என்னோட அருமையான பொம்மைய பார்த்தேன். என்ன கைக்கலை நீங்க ரொம்ப ரொம்ப திறமைசாலி உங்களுக்காக ஆண்டவனிடம் வேண்டிகிறேன். நிச்சயமா உங்கள ஒரு நாள் சந்திக்கிறேன் கண்ணா என பேசி அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த ரஜினி ரஞ்சித், அவரை சந்திக்கும் நாளுக்காக காத்திருப்பதாகவும் அப்போது அவருக்கு ராகவேந்திரா சிலையை தரவிருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
சிறுவதியிலிருந்து ரஜினியின் மேல் பற்றுகொண்ட ரஞ்சித்தையும் அவரது பாசத்திற்கு மதிப்பளித்த ரஜினியையும் ரசிகர்கள் மெச்சி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rajinikanth, Rajinikanth Fans