அவனியாபுரம்: ஜல்லிக்கட்டில் மாட்டை முதலில் அவிழ்த்து விடுவதில் தகராறு - இருவருக்கு கத்திக்குத்து
இருவருக்கும் காயம் பலமாக ஏற்பட்ட காரணத்தால் அவர்கள் இருவரையும் காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு
- News18
- Last Updated: January 14, 2021, 12:33 PM IST
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாட்டை முதலில் அவிழ்த்து விடுவதில் ஏற்பட்ட தகராறில் இருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மதுரையில் கரடிக்கல் பெருமாள்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார்(27), தேவேந்திரன் (25). இவர்கள் இருவரும் தங்கள் மாட்டை அவிழ்த்து விடுவதற்கு வரிசையில் நின்று கொண்டிருந்த பொழுது அருகில் இருந்த வேறு ஒருவருடன் மாட்டை யார் முதலில் அவிழ்த்து விடுவது என்று தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் இவர்கள் இருவருக்கும் கத்திகுத்து ஏற்பட்டது. அவர்கள் இருவரும் உடனடியாக உள்ளே இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
Also read... வாடிவாசலில் இருந்து சீறும் காளைகள்... அடக்கத்துடிக்கும் மாடுபிடிவீரர்கள் - ஜல்லிக்கட்டு புகைப்பட கேலரி இருவருக்கும் காயம் பலமாக ஏற்பட்ட காரணத்தால் அவர்கள் இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். இருவரும் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவத்திற்கு காரணமானவர்களில் ஒருவரை போலீசார் சந்தேகத்தின் பெயரில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
மதுரையில் கரடிக்கல் பெருமாள்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார்(27), தேவேந்திரன் (25). இவர்கள் இருவரும் தங்கள் மாட்டை அவிழ்த்து விடுவதற்கு வரிசையில் நின்று கொண்டிருந்த பொழுது அருகில் இருந்த வேறு ஒருவருடன் மாட்டை யார் முதலில் அவிழ்த்து விடுவது என்று தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் இவர்கள் இருவருக்கும் கத்திகுத்து ஏற்பட்டது. அவர்கள் இருவரும் உடனடியாக உள்ளே இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
Also read... வாடிவாசலில் இருந்து சீறும் காளைகள்... அடக்கத்துடிக்கும் மாடுபிடிவீரர்கள் - ஜல்லிக்கட்டு புகைப்பட கேலரி
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.