லாரியில் பேட்டரி, டீசலை திருடும் போலீஸ்... வெளியானது சிசிடிவி காட்சி...!

லாரியில் பேட்டரி, டீசலை திருடும் போலீஸ்... வெளியானது சிசிடிவி காட்சி...!
உதவி ஆய்வாளர் லாரியில் பேட்டரி, டீசல் திருடும் சிசிடிவி காட்சி
  • News18
  • Last Updated: December 6, 2019, 2:38 PM IST
  • Share this:
செங்கல்பட்டு மாவட்டத்தில், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் நபர் உதவியுடன் காவலர் ஒருவர் லாரியில் பேட்டரி மற்றும் டீசலைத் திருடிக் காரில் எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் காவல்நிலையத்தில் மணல் திருட்டு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட லாரி ஒன்று கிரிவலப் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருக்கழுக்குன்றம் காவல்நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராகப் பணிபுரியும் கார்த்திகேயன், கடந்த 3-ம் தேதி இரவு 11 மணியளவில் லாரி நிறுத்தி வைக்கப்பட்ட இடத்திற்கு தனது புல்லட்டில் வந்து சேர்கிறார்.


அவர் பின்னாலேயே பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பில் பணியாற்றும் நபர் ஒருவர் காரில் வருகிறார். அங்கு காரை நிறுத்துகிறார். பின்னர் இருவரும் சேர்ந்து லாரியின் முன்பக்கம் சென்று பார்க்கின்றனர்.

காரில் வந்த நபர் காரில் இருந்து டீசல் கேன் ஒன்றை எடு்ததுச் செல்கிறார். சில நிமிடங்களில் அந்த நபர் லாரியில் இருந்து பேட்டரியைத் திருடிக் கொண்டு வந்து காரின் பின்பக்கம் வைக்கிறார். தொடர்ந்து டீசல் கேனையும் அங்கு வைக்கிறார். இதையடுத்து, இருவரும் அங்கிருந்து தங்கள் வாகனங்களில் புறப்பட்டுச் செல்கின்றனர்.இந்தக் காட்சிகள், லாரியின் எதிர்பக்கம் உள்ள வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இந்தக் காட்சிகளின் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி கண்ணன் விசாரணை நடத்தி, உதவி ஆய்வாளரை ஆயுதப்படைக்கு பணியிடம் மாற்றி உத்தரவிட்டுள்ளார்

உதவி ஆய்வாளர் லாரியில் பேட்டரி, டீசல் திருடும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

Also see...
First published: December 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்